Thread on "குட்டி கமல் அபூர்வ சகாதாரர்கள்":
1989ல இப்படி ஒரு படம் எடுக்கிறதுக்கு கமல் சார் தவிர வேற யாரும் யோசிச்சிருக்க கூட மாட்டாங்க.அப்படி யாராலும் நினைச்சு கூட பாக்க முடியாத காரியத்தைத்தான் இந்த படத்துல பண்ணிருக்காரு.அவர் ஒரு சினிமா encyclopediaனு நிரம்பித்த படம்.
1989ல இப்படி ஒரு படம் எடுக்கிறதுக்கு கமல் சார் தவிர வேற யாரும் யோசிச்சிருக்க கூட மாட்டாங்க.அப்படி யாராலும் நினைச்சு கூட பாக்க முடியாத காரியத்தைத்தான் இந்த படத்துல பண்ணிருக்காரு.அவர் ஒரு சினிமா encyclopediaனு நிரம்பித்த படம்.
1989ல எந்த ஒரு பெரிய டெக்னாலஜி இல்லாத கால கட்டத்துல எப்படி இப்படி ஒரு படம் எடுத்தார்னு இன்னைக்கு வர யாருக்குமே தெரியாது.அதுல வர குள்ளமான கமல் சார் Character கொஞ்சம் பாப்போம்.இதில நம்ம பாக்க போற விஷயம் எதுமே யாராலையுமே நிரூபிக்க படல,இப்படி நடந்துருக்க கூடும் என்னும் கற்பனையே..
Dupe Artist-படத்துல குட்டி கமல் அவர்கள் சில காட்சில மேலேந்து குதிப்பாரு,குட்டிக்கரணம் அடிப்பாரு அதுலாம் ஒரு குட்டி மனிதரை DUPE வச்சிருப்பாங்க.அந்த ஷாட் எல்லாத்திலையும் கமல் முகத்தை காட்ட மாட்டாங்க எல்லாமே BACK / LONG ஷாட் மாதிரி எடுத்துப்பாங்க.இப்படி படத்துல நெறியா காட்சில வரும்.
Closeup Shots-படத்துல குட்டி கமல் வர 80 % காட்சிகள் எல்லாமே closeup shots எடுத்துருப்பாங்க.எல்லாமே Top Angle ஷாட்ஸ்.அந்த காட்சில பாத்தா எல்லாமே அவர் இடுப்புக்கு மேலதான் படம் புடிச்சிருப்பாங்க.அப்போதான் அவர் உயரம் தெரியாது.பல இடங்கள் கேமரா ட்ரிக்.
Special costume -படத்துல எல்லா இடத்துலயும் அவர் கழுத்து தெரியாது,கழுத்து வர tshirt /shirt போற்றுப்பாரு.கழுத்துக்கும் தலைக்கும் இருக்குற இடைவெளி அதிகமா இருக்கும் அதுக்காக கழுத்து வர டிரஸ் போற்றுப்பாரு அப்புறம் அவரோட பெரிய கைய மறைக்க full hand ஷர்ட் போற்றப்பாரு.
அப்புறம் அவர் முழுக்க முழுக்க overcoat போட்டுத்தான் நடிச்சிருப்பாரு,அவர் trousers வயித்துக்கு மேல்தான் போற்றுப்பாரு அப்போதான் வயிறுக்கும் கழுத்துக்கும் உள்ள இடைவெளி கம்மியா காமிக்க முடியும்.அப்புறம் அவர் முட்டில போற்றுகிற speical shoe கச்சிதமா சின்னதா காமிக்க உதவி பண்ணுச்சி.
Editing-ஒரே ஷாட்டை ரெண்டு தடவ எடுத்து ஒன்னு சேத்துர்ப்பாங்க.சர்க்கஸ் கேலரில நடப்பாரு குழில நின்னுடுஇருந்த அவரு காலு தெரிஞ்சிருக்கும் ஆனா தெரியாது.இதுல கமல் கால் தெரிற மாறி ஒரு ஷாட் எடுத்துட்டு அப்புறம் கமல் இல்லாம கேலரி மட்டும் ஒரு ஷாட் எடுத்து மிஸ்/MERGE பண்ணிருக்கலாம்.
Digging /Trench making - குட்டி கமல் நடக்குற காட்சிலாம் அவ்ரு ஒரு Trench செஞ்சி அதுல நடந்துருக்க வாய்ப்பு இருக்கு.கமல் குள்ள மனுஷங்க கூட நடக்குறப்ப அவங்க பின்னாடி ஒரு trench பண்ணி அதுல நடந்துருக்கலாம்.அந்த குழி தெரியாத மாறி கேமரா angle வச்சிருக்காலம்.
puppetry /artificial special leg - சில காட்சில அவரு கால் மேல கால் போடுவாரு.அதுக்குலாம் ஸ்ப்ரிங் அட்டச் பண்ண artificial காலு வச்சிருக்கலாம்.இல்லனா இந்த குழந்தைங்க ஷோல காமிக்கிற மாறி பின்னாடி வேறுஒரு ஆளு இருந்த கைல pant மாட்டிகிட்டு காலு மாறி காமிச்சிருக்கலாம்.
கால மடக்கி/கயிறு கட்டி- தவிர்க்கவே முடியாத சில ஷாட்ல அவரு கால கட்டித்தான் நடிச்சார்ப்பாரு.அதையும் கேமரா ட்ரிக்ஸ் வச்சி மறச்சிக்கலாம்.கமல புடிச்சி தூக்கிட்டு வருவாங்க அப்போல்லாம் எதுமே பண்ண முடியாது,அந்த காட்சிலாம் கயிறு கட்டிதான் நடிச்சிருப்பாருனு நினைக்கிறன்.
நம்ம என்ன சொன்னாலும் எது உண்மையுனு அவருக்கு மட்டும்தான் தெரியும்.எப்போதுமே புதுசா ஏதாச்சும் பண்ணிட்டே இருப்பாரு.இன்னைக்கு வர யாராலும் அவர் எப்படி நடிச்சார்னு சரியாய் சொல்லமுடில.அதுதான் கமல்.அவருக்கு அவர்தான் நிகர்.
படம் முழுக்க இப்படி ரசிகர்களை நம்ப வைக்க ரொம்பவே மெனக்கெட்டார்.படத்தின் மேக்கிங்கை மட்டும் தனி புத்தகமாகவே எழுதலாம்.இப்போ இருக்கற டெக்னாலஜி எதையும் சாத்தியப் படுத்தும்.ஆனா, எந்த டெக்னாலஜியும் இல்லாத அந்த நாட்களிலேயே கமல் அட்டகாசப் படுத்தியது தான் ஆச்சர்யம்'
There is an rare interview on youtube, if you really inspired by Dr.kamalhasan just have a look into that,
Video name:"Kamal haasan karan thapar".
Video name:"Kamal haasan karan thapar".