"காமராஜரைப் போல எளிமையானவர் உண்டா?
கக்கன் இறக்கும் போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார்! மத்த கட்சில எல்லாம் எந்த அரசியல் வியாதி இப்படி இருக்காங்க? "
மேல கண்ட இந்த ஸ்டேட்மெண்ட்டை பலமுறை வாட்ஸ் அப்பில் பார்த்து இருப்பீர்கள்!
(1/N)
பார்த்து "அட! ஆமால்ல!!" என்று யோசித்தும் இருப்பீர்கள்.
காமராஜர், கக்கன் என்று சொல்கிறார்களே.. அதற்கு அடுத்ததாக
மூன்றாவதாக யார் பெயரையாவது சொல்லி இருக்காங்களா..? மாட்டாங்க..!
காரணம் ,
அவர்கள் இருவர் தவிர அந்தக் கட்சியில் இருந்த பொள்ளாச்சி மகாலிங்கம், டி.டி.கே துவங்கி
(2/N)
புதுக்கோட்டை மகாராஜா, கபிஸ்தலம் மூப்பனார் வரை அத்தனைபேரும்_ஆலைஅதிபர்கள், மிட்டா மிராஸூகள் ஜமீன்கள்..!
சரி இப்போது விசயத்துக்கு வருவோம்.
கக்கன் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். ஒரு முன்னாள் அமைச்சர்! அவராவது முன்னாள் அமைச்சர்..
ஆனால் பதவியில் இருக்கும் போதே ஒரு
(3/N)
முதல்_அமைச்சர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் இறந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு?
அண்ணா எங்கு இறந்தார் என்று உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். சொல்வார்கள். இல்லை என்றால் கூகிள் செயுங்கள் பத்து
வேட்டி சட்டைகளோடு காமராஜர் மறைந்ததாக சொல்வார்கள்.
(4/N)
ஐந்து வேட்டி சட்டைகளோடு இறந்தவர் அண்ணா!
காமராஜர் கூட துவைத்து போட்டு வருவார்.. அழுக்கு வேட்டி சட்டையோடு தமிழகம் எங்கும் அலைந்து திரிந்தவர் அண்ணா!!
சாதிக்பாட்சா என்றொரு திமுக அமைச்சர். திமுகவில் பொருளாளராக இருந்தவர். மறைந்த போது அரசுஊழியர் குடியிருப்பில் இருந்தது
(5/N)
அவர் குடும்பம். அவர் இறந்ததும் அந்தக் குடியிருப்பும் பறி போனது!!
புதுக்கோட்டையில் கவிதைப்பித்தன் என்றொரு திமுக முன்னாள் எம்.எல்.ஏ! ஒன்றாம் தேதி அவருக்குக் கிடைக்கும் எக்ஸ் எம்.எல்.ஏ.களுக்கான பென்ஷன் பணம் தான் அவருக்கான இன்றைய வாழ்வாதாரம். எவரை எங்கேனும் யாரேனும் பேச
(6/N)
அழைத்தால் கட்சிக்காரன் தான் காசு போட்டு கூட்டிச் செல்லும் நிலையில் தான் அவர் வாழ்க்கை!
இதில் இன்னொரு கொடுமையான விசயம் என்ன தெரியுமா??
இன்றைக்கு திராவிடஇயக்கத்தை
தாக்கிப் பேசுவதற்காக கக்கனையும், காமராஜரையும் தூக்கிப் பேசும்
இதே கூட்டம் தான் காமராஜர் வாழ்ந்த காலத்தில்
(7/N)
ஆச்சார்யார் ராஜாஜி இருந்த இடத்தில் இந்த படிக்காத முட்டாளா..? "
சிங்கம் இருந்த இடத்தில் சிறு நரியா?
என்று காமராஜரை விமர்சித்து எழுதி வந்தது.
Via somasundharam
You can follow @DbrND719j7EL2Q8.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.