விசயம்:
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு.

பொருள்:
OBCயின் வளர்ந்த மேலடுக்கு சாதியினர்களுக்கு (மட்டுமேயான) பம்பர் பரிசு.
#வகுப்புவாரி_பிரிதிநிதுத்துவம்_கொடு
OBC கோட்டாவிற்கு ஒதுக்கப்படும் இடங்களில் 90%க்கும் மேலான இடங்களை,
பொருளாதார/கட்டமைப்பு ரீதியாக உயரத்தில் உள்ள BCகம்யூனிட்டி மாணவர்களே அள்ளிவிடுவார்கள்.

பொருளாதார/கட்டமைப்பில் பின்தங்கியுள்ள MBC/DNC கம்யூனிட்டிகளுக்கு 10%இடங்கள் கிடைப்பதே கடினம்.
இது அசமத்துவம்.
நிச்சயமான அநீதி.
ஏற்கனவே மத்திய அரசு கல்வி அமைப்புகளில் SC/ST மாணவர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது.
General பிரிவிலும் (பொருளாதாரத்தில் நலிந்தோர்க்கு) இட ஒதுக்கீடு இருக்கிறது.
இதுபோக மீதமுள்ள இடங்களில் OBCக்கு இட ஒதுக்கீடு என்பது மோம்போக்காக பார்த்தால் நல்ல விசயமாகத்தான் இருக்கும்.
ஆனால்.. இல்லை.
இங்கே OBCக்குள் உள்ள BC கம்யூனிட்டி சாதியினர் பெரும்பாலும் FC/General பிரிவு சாதியினரோடு கல்வி/வேலை வாய்ப்புகளில் சரிசமமாக போட்டிபோடும் அளவுக்கு பொருளாதாரம்/கல்விப் பின்புலத்தில் உள்ளனர்.

ஆனால், இதே OBCக்குள் வரும் இதர MBC/DNC பிரிவில் உள்ள சாதியினருக்கு அந்தளவு பின்புலம் இல்லை.
இந்தநிலையில்.. பொத்தாம்பொதுவாக OBCக்கு இட ஒதுக்கீடு என்பது, நடுத்தர வர்க்கமான BC பிரிவு மாணவர்களுக்கே அதிகமாக பயன்படும்.
இதுதான் காலம்காலமாக நடந்துவரும் திராவிட தந்திரம்.
அடித்தட்டு MBC/DNC மாணவர்களுக்கு இதில் பலாபலன் விகிதாச்சார அளவில் மிகவும் குறைவாக இருக்கும்.
இதை தடுக்கனும்.
குறைந்தபட்சமாக..
இந்த OBC இடஒதுக்கீட்டை, தமிழகத்தில் உள்ளது போல் BC/MBC/DNC என்ற வகையில், அந்தந்த கம்யூனிட்டிகளின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் மூன்றாக பிரித்து தரவேண்டும்.
இதுதான் முழுமையான நீதியாக இருக்கமுடியும்.
@CMOTamilNadu @OfficeOfOPS @PMOIndia @BJP4TamilNadu
End.
🙏
You can follow @oorkkaaran.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.