ஜெகத் கஸ்பர் எனும் பாதிரி மறுபடியும் சர்ச்சையினை தொடங்கிவிட்டார், அது அவரின் குற்றமல்ல மாறாக கால்டுவெல் நிறுவபாடுபட்ட அந்த தியரி

தமிழகம் எந்த மதத்துக்கும் சொந்தமல்ல , இந்துமதம் வந்தேறிமதம் அப்படி இஸ்லாமும் கிறிஸ்தவமும் வந்தேறி மதம் என்பது அவன் எழுதிவைத்த தியரி.
அதைத்தான் கந்த சஷ்டி கவச சர்ச்சையில் நுழைக்கபார்க்கின்றார் பாதிரி

பாதிரி மறக்கும் விஷயம், தமிழகம் பாரதகண்டத்தின் நீட்சி என்பது. இங்கு சமஸ்கிருதம் என்பது இணைப்பு மொழியாக இருந்தது, தமிழ் என்பது இங்கு வழக்கு மொழியாக இருந்தது

ஆதிசங்கரரும் , திருஞானசம்பந்தரும் புதிதாக புரட்சி
செய்யவில்லை.இங்கே அழிந்து கொண்டிருந்த இந்துமதத்தை பவுத்தர்களிடமிருந்தும் சமணர்களிடமிருந்தும் காத்தார்கள்

குமரகுருபரரும் இன்னும் பலரும் இஸ்லாமியரிடம் இருந்து காக்க போராடினார்கள். இருக்கும் ஒன்றை காக்க நடப்பது போராட்டம்,இல்லா ஒன்றை காக்க நினைப்பது எப்படி போராட்டமாக இருக்க முடியும்
அது திணிப்பு

பாதிரி செய்வது திணிப்பு வேலை

பாதிரி சொல்வது என்னவென்றால் கிறிஸ்தவம் வந்து சாதி ஒழித்து கல்வி கொடுத்து சமத்துவம் பேணிற்றாம், சரி தூத்துகுடி மறைமாவட்ட பிஷப்பாக ஒரு நாடார் ஏன் வரமுடியவில்லை?

நாகர்கோவில் மறைமாவட்டம் ஏன் பிரிந்தது?

கிறிஸ்தவம் இங்கே கல்வி பணிக்கு
மட்டுமா வந்தது? அப்படியானால் ஏகபட்ட செல்வம் இங்கிருந்து ஐரோப்பா சென்றது ஏன்? அந்த கோஹினூர் வைரமெல்லாம் இந்தியர் ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்ததா?

இங்கு அடிமை கல்வி தவிர எதை போதித்தான் வெள்ளையன், இன்று உலகை மிரட்டும் ஜப்பானும் தென்கொரியாவும், சீனாவும் வெள்ளையன்
கல்வியிலா வளர்ந்தது?

வெள்ளையன் இங்கு செய்தது வியாபாரம், அதில் கல்வியும் ஒருவகை. உனக்கு கல்வி கொடுப்பேன் மதம் மாறு எனும் வியாபாரம்.

எதை சும்மா கொடுப்பான் வெள்ளையன், அட இன்றுவரை ரபேல் என்ன சும்மாவா வந்தது?

அதை பாதிரி அழகாக மறைக்கின்றார், இது விஷமானது மத கலவரத்தை தூண்ட கூடியது
பாதிரி சில விஷயங்களுக்கு விளக்கம் சொல்லமாட்டார், ஆம் இலத்தீன் என்பது 1960 வரை அகில உலகெல்லாம் கத்தோலிக்க வழிபாட்டு மொழியாக இருந்தது. தமிழகத்திலும் லத்தீனில்தான் திருப்பலி நடந்தது

ஏன்?

பலமொழிகள் உள்ள உலகில் ஒரு கிறிஸ்தவ பாதிரியோ கிறிஸ்தவனோ சந்திக்க நேர்ந்தால் அவன் பரிமாற்றம்
செய்வது எளிது, வாடிகனுக்கு திருப்பயணம் செய்யும் கிறிஸ்தவன் உரையாட எளிது திருப்பலியில் கலந்து கொள்ள எளிது என்பதாலே

எந்த போப்பும் தமிழ்படிக்கவில்லை, எந்த கர்டினலும் தமிழ்படிக்கவில்லை, தமிழரான சைமன் லூர்துசாமி கூட ஆங்கிலத்திலும் லத்தீனிலும்தான் பெரும்பாலும் பேசுவார்
அந்த சபையினை சேர்ந்த ஜெகத் கஸ்பர் சமஸ்கிருதம் வைதீகம் என பேசுவது எல்லாம் விஷமும் வன்மமும் நிறைந்த வார்த்தைகள்

வாடிகனுக்கு லத்தீன் போல காசிக்கும் காஞ்சிக்கும் சமஸ்கிருதம் இருந்தது இது எப்படி தவறாகும்

இன்று லத்தீன் இடத்தை ஆங்கிலம் பிடித்தது அதை பாதிரி ஏற்றார், ஆனால் சமஸ்கிருதம்
இடத்தை இந்தி பிடித்தால் பாதிரி எதிர்ப்பார், இதெல்லாம் என்ன நியாயம்?

இது இந்துக்களின் பூர்வீக நாடே, இடையில் வந்த புத்தமும் சமணமும் இஸ்லாமும் கிறிஸ்தவமும் இடையிலே சென்றுவிட்டு தன்னை அடிக்கடி மீட்டுகொள்ளும் இந்து நாடே

சமஸ்கிருதம் என்பது ஒரு இணைப்பு மொழி, வைதீகம் என்பது ஒரு
வழிபாட்டுமுறை அவ்வளவே

தமிழகத்தில் சுடலைமாடன் கோவிலும் இன்னும் இசக்கி அம்மன் கோவிலும் சமஸ்கிருத வழிபாட்டிலா நடக்கின்றது, கஸ்பர் சாமி அங்கெல்லாம் சென்று சாமியாடுவாரா?

நாம் கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் பழித்ததை கண்டிக்கும் ஜெகத் கஸ்பரை பாராட்டுகின்றோம், ஆனால் அந்த சாக்கில்
இங்கே இந்து வந்தேறிமதம் என்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்

இங்கு சுடலையும் காளியும் இசக்கியும் முருகனும் எந்நாளும் உள்ள தெய்வங்களே. அதை தாண்டி வந்த ஜெருசலேம் வாடிகன் தெய்வமே வந்தேறி தெய்வம்

இங்கே மாதா கோவில்கள் என்ன வகை?

ராஜ காளி அம்மன் என்பது ராஜ கன்னிமாதா என்றாயிற்று.
கல்யாண அம்மன் என்பது கல்யாண மாதா என்றாயிற்று, பெரியநாயகி அம்மன் என்பது பெரியநாயகி மாதா ஆயிற்று

செவ்வாய், வெள்ளி என இந்துக்களின் முக்கிய நாளெல்லாம் கிறிஸ்தவ புனிதருக்கு ஒதுக்கபட்டன‌

வேல் அயற் கன்னி வேளாங்கண்ணி என்பது கூட விட்டுவிடலாம் ஆனால் கந்த சஷ்டி கவசத்தை மாதா பாடலாக
"ஜெபிப்போர்க்கு துன்பம் போம்....அருள்நிறை தாயே.." என பாடி அது 20 ஆண்டுகளாக சுற்றிகொண்டிருப்பதை எப்படி விட முடியும்?

பாதிரி கருப்பர் கூட்டத்தை கண்டிப்பது போல் இந்துக்களின் கந்த சஷ்டி மெட்டில் அமைந்ததை கண்டிக்க வேண்டும் அல்லவா? செய்வாரா?

ஆம் கந்த சஷ்டி ராகத்தில் அமைந்த அந்த
மாதா பாடலை ஜெகத் கஸ்பர் கண்டிக்கட்டும், மரிவலம் எனும் பெயரில் கிரிவலம் போல் செய்யும் அலப்பறைகளை கண்டிக்கட்டும்

அதைவிடுத்து கருப்பர் கூட்டம் கண்டிப்பு எனும் பெயரில் நாடகமிட்டால் நன்றாக இல்லை, அது அருவெருப்பானது

இவ்விடத்தில் தமிழரின் கலாச்சார இசை இந்துக்களுக்கு மட்டுமா?
கிறிஸ்துவர்களுக்கு இல்லையா என விதண்டாவதம் செய்தால் அது கண்டனத்துகுரியது.

அவ்விடயத்தில் இஸ்லாமியர்கள் பரவாயில்லை, ஒரு காலமும் இந்துக்களின் கலாச்சாரத்தை பாடல்களை அடையாளத்தை திருடவே மாட்டார்கள், நேருக்கு நேர் நிற்பார்களே தவிர இப்படி உள்ளே புகுந்தெல்லாம் குழப்பமாட்டார்கள்.
அவர்களிடம் ஒரு நேர்மை உண்டு

கிறிஸ்தவ கோஷ்டியிடம் அந்த நேர்மை ஒரு காலமுமில்லை சுத்தமாக இல்லை. இந்துக்களின் வழியிலே புகுந்து விஷத்தை விதைத்தல் அதை உருமாற்றுதல் எனும் கோழைதனமான விஷயங்களைத்தான் செய்வார்கள.

அல்லேலூயா ராகத்தில் காளியம்மா.. மாரியம்மா என பாடினால் கிறிஸ்தவருக்கு
பொறுக்குமா? கிறிஸ்துவ ஆலயம் போல இந்து ஆலயம் கட்டி அங்கு திருப்பலி பாணியில் இந்து குருமார்கள் கீதை படிப்பதும் விளக்களிப்பதும் இன்னும் பலவும் செய்தால் அவர்களுக்கு தாங்குமா?

ஐரோப்பிய பாணியில் கலாச்சாரத்தில் இந்துக்கள் ஊடுருவ எவ்வளவு நேரமாகும், அப்படி ஊடுருவினால் தாங்குமா?
உலகில் ஐரோப்பாவுக்கான நாகரீகத்தில் கிறிஸ்தவம் வாழ்கின்றது அது அழகு அப்படியே விட்டுவிடலாம்

அரேபிய கலாச்சாரத்தில் இஸ்லாம் வாழ்கின்றது அதுவும் அழகு அப்படியே விட்டுவிடலாம்

சீன ஜப்பானிய கலாச்சாரத்தில் புத்தம் வாழ்கின்றது அதுவும் அழகு ரசிக்கலாம் விட்டுவிடலாம்
ஜெருசலேமில் யூதம் தனித்து வாழ்தல் அழகு

அப்படியே இங்கு தமிழ்கலாச்சாரம் இந்துவாய் தனித்திருத்தல் அழகு அது தொடரட்டும் அந்த தனித்துவம் நிலைக்கட்டும், அதில் ஏன் இம்மாதிரி பாதிரிகள் புகுந்து குழப்ப வேண்டும்

நாம் இந்திய கத்தோலிக்க பீடத்துக்கு அப்பொழுதே சொன்னோம், இந்திய எதிரிகளான
புலிகளுக்கு ஆதரவானவரும், அமெரிக்க உளவுதுறை இயக்கிய பிலிப்பைன்ஸ் வானொலியில் வேலை செய்தவருமான ஜெகத் கஸ்பர் பாதிரி புலி ஆதரவில் தேசவிரோதம் பேசுகின்றார் இதை கண்டியுங்கள்

அவர்கள் செய்யவில்லை

இதோ இப்பொழுது இந்துமதம் தமிழகத்துக்கு வந்தேறிமதம் என
சொல்ல தொடங்கி கால்டுவெல் சொல்லிகொடுத்து திமுக தாங்கிபிடித்ததை திமுக ஏஜெண்டாக சொல்லி திரிகின்றார்

ஒரு இந்து துறவி ஐரோப்பாவில் கிறிஸ்துவத்தை சீண்டமுடியுமா? வாடிகனில் சீண்ட முடியுமா?

ஐரோப்பாவுக்கு கிறிஸ்தவம் வந்தேறிமதம், ரோமை மதத்தை கிரேக்க மதத்தை அழிக்க வந்த வந்தேறிமதம்,
அதே ஐரோப்பாவில் இந்துமதமும் பரவட்டும் , ஐரோப்பா எல்லா மதத்தாருக்கும் பொதுவான பூமி என ஒரு இந்து துறவி முழங்க முடியுமா?

ஐரோப்பா என்ன? அமெரிக்காவில் முழங்கமுடியுமா?

உண்மையில் ஐரோப்பாவுக்கு கிறிஸ்தவம் வந்தேறிமதமே, அங்கு இப்பொழுது இந்துக்கள் இந்த உண்மையினை
சென்று சொன்னால் யார் மறுக்க முடியும்?

ரோமை மதத்தை அழித்த கிறிஸ்தவனே என ஒரு மானமுள்ள இத்தாலியன் முழங்கினால் அதில் எவ்வளவு உண்மை உண்டோ அதே உண்மை பாதிரியினை நோக்கி "ஏ திருட்டு பாதிரி, எம் நிலத்தில் எம் மதத்தை பற்றி பேசுகின்றாயா?" என திருப்பி கேட்க இந்துக்களுக்கும் உண்டு
இங்கே ஒரு கிறிஸ்தவ துறவி இந்துமதம் பற்றி பேசும் அவசியம் இல்லை, பிராமணரை சீண்டும் அவசியமில்லை

இங்கே கிறிஸ்துவம் வளர பைபிளை மொழிபெயத்து கிறிஸ்தவ பாடலெல்லாம் எழுதியது பிராமணரே அந்த நன்றி கூட பாதிரிக்கு இல்லை

இந்திய கத்தோலிக்க மேலிடம் உடனே நடவடிக்கை எடுக்கட்டும் இல்லையேல்
அரசு நடவடிக்கை எடுக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது,

கருப்பர் கூட்டம் இருக்கும் பக்கத்து செல்லை சிலுவை பைபிள் சகிதம் தயார்படுத்தி வைப்பது சிறைதுறைக்கும் நல்லது
You can follow @Wolfrik1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.