கேள்விகளை நான் கேட்கிறேன் பதில்களை நீங்கள் முடிந்தால் தந்து செல்லுங்கள் 
1.புன்னகையை பூக்களுடன் ஒப்பிடலாமா. நீங்கள் ஒப்பிட்டு கூற நினைப்பது

1.புன்னகையை பூக்களுடன் ஒப்பிடலாமா. நீங்கள் ஒப்பிட்டு கூற நினைப்பது
2.நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவரா
3.கடவுள் இல்லை என நம்புபவர்கள் அடுத்தவர்களின் நம்பிக்கையை நகைப்பது மட்டும் சரியா
4.அடுத்தவர் சொல்வதெல்லாம் தனக்கென்றே நினைப்பவர்கள் உங்கள் பார்வையில்
5.தன் செய்வது தவறென்று தெரிந்தும் திருத்தி கொள்ளாதவர்கள்???
6.ஒருவரின் அழுகைக்கு உடனடி ஆறுதல் தேவையா. இல்லை நீங்கள் நினைப்பது
7.அன்பெனப்படுவது உங்கள் பார்வையில்
8.இங்கு ரசனை என்ற பெயரில் அத்துமீறிய வர்ணிப்பு செய்வது சரி என்பீர்களா
9.நான் இவரின் ரசிக(கை)ன் எனக்கு rt வருமா என்ற கீச்சுகள் பார்த்தால் என்ன தோன்றும்
10.ஒருவரின் அதிகப்படியான அக்கறையின் போது உங்கள் மனநிலை???
11.தனக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்களிடம் பேச கூடாது என நினைப்பவரா
12.எனக்கு அவரை பிடிக்காது அவரிடம் நீயும் பேசக்கூடாது என்பவர் பற்றி நீங்கள் நினைப்பது
13.ஆச்சரியம் என்பது ரசிப்பதற்கும் வெறுப்பதற்கும் உள்ள சிறு வித்தியாசம் கூறலாமே
14.பேரன்பு என்பது உங்கள் பார்வையில்
15.பொறுமைக்கும் எல்லை உண்டு. நீங்கள் அதிகப்படியான பொறுமை இழந்த ஏதோ தருணம் கூறமுடியுமா

16.ஆமா இந்தியா வல்லரசாகுமா 


17.இப்போதைக்கு எந்த கட்சியுமே தன் பதவிக்காக சுயநலமாய் செயல்படுவது தான் நம்முடைய இப்போதைய சமூகநிலைக்கு காட்சியும் சாட்சியும். சரியா??
18.இந்த காட்சியில் அழுகைக்கு பதில் சிரிப்பு தான் வந்தது என நினைக்கும் படமும் நடிகரும்
19.பழையன கழிதல் போல தான் எந்த பிரச்சனையும் கையாளப்படுகிறது சரியா
20.பள்ளியில் பென்சில் பேனா&ஏதோ ஒன்று திருடி முட்டி போட்டதுண்டா

21.அடுத்தவர் எழுதி கொடுத்து கையெழுத்து நல்லா இருக்கு என பாராட்டு வாங்கியதுண்டா(
)


22.பள்ளியில் சுதந்திர தினவிழாவில் உங்களின் திறமை(பேச்சு, பாட்டுபோட்டி&நாடகம்) ஏதாவது??
23.பிடித்தவர் என்பதற்காக அவர்களின் அனைத்து தவறுகளுக்கும் துணை நிற்பீர்களா
24.இந்த படத்தில் இவர் நடித்திருந்தால் நன்றாக இருந்துருக்கும் என நினைக்கும் படமும் நடிகரும்
25.ஒருவரின் தன்நிலை விளக்கம் கேட்கும் போது உண்மையில் என்ன தோன்றும்
26.எல்லா குற்றச்சாட்டுக்கும் பொறுமைகாப்பவர் திடீரென ஒன்றுக்கு மட்டும் கோவப்பட்டால் அதில் அவரின் தவறு இருக்க வாய்ப்பிருக்கலாம் தானே

27.பிரிவு என்பது புரிதலோடும் புன்னகையோடும் இருக்க வேண்டும். உங்கள் பார்வையில்
ஏதோ கேட்ருக்கேன் நல்லா இருந்தா ஏதோ கருத்தோ கவிதையோ சொல்லலாமே வன்மத்தை தவிர 

