அன்புள்ள தம்பிக்கு,

WhatsAppல் ஆசிரியர் வீரமணி அவர்களை திட்டியிருந்த சங்கி வீடியோவை நீ forward செய்திருந்ததை பார்த்தேன்.

நாம் ஊரில் இருந்த வரை நீ பெரிதாக அரசியல் பேசி பார்த்ததில்லை. என் அப்பா திமுக என்றால், உன் அப்பா அதிமுக.
ஆனால் நீ எப்படி ஒரு சங்கி ஆதரவாளராக மாறினாய் என்று அறிய விரும்புகிறேன். உன்னைப் போன்ற எண்ணற்ற தம்பிகள் வெளிநாடுகளில் இருக்கும்போது பார்க்கும் தொடர் YouTube வீடியோக்களால் இந்த மாற்றமா? இல்லை மீடியாக்களால் ஏற்பட்ட பிம்பமா? என்று அறிய ஆவல்.
ஏனென்றால் தமிழகம் முழுவதும் இப்படி எண்ணற்ற தம்பிகள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இன்று தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அரசியல் சட்ட பாதுகாப்போடு இருக்கிறது என்றால் அதற்கு ஆசிரியர் வீரமணி அவர்கள் மிக முக்கியமான காரணம்.
தமிழகத்தில் 30% இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஓதுக்கீட்டை 50% மாற்றியதில் திராவிடர் கழகத்தின் பங்கு மிக முக்கியமானது.
நாளை உன் குழந்தை ஓரளவிற்கு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பெரிய கல்லூரிகளில் பொறியியல் படிப்போ அல்லது மருத்துவக் கல்லூரிகளில் இடமோ கிடைக்க வாய்ப்பு இருக்கவேண்டுமென்றால் அதற்கு இந்த 50% இடம் தேவை.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் 100 சீட் இருந்தால் அதில் 50 இடம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 100 இடம் இருந்தால் அதில் 50 இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது.
100 தாசில்தார் இடங்கள் இருந்தால் அதில் 50 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு உறுதி செய்யப்படுகிறது.

அதாவது தமிழகத்தின் ஆகச்சிறந்த கல்விநிலையங்கள் அனைத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது.
கிராமத்து மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக கடந்த சில வருடங்களாக தொடர் பிரச்சாரம், மாநாடு என்று இயங்கிக்கொண்டிருக்கிறார். நாளை உன் குழந்தைக்கும் மருத்துவக் கல்வியோ அரசு வேலையோ கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
வெளிநாட்டு வாழ்க்கையில் சங்கிகள் அனுப்பும் WhatsApp புரளிகளை பார்த்து ஆசிரியரின் மீது நீ வன்மத்தை கொட்டுவதை பார்க்கும்பொழுது எனக்கு உண்மையில் பரிதாபமாக இருக்கிறது.இந்த விளக்கம் கூட நான் ஏதோ திமுககாரன் திராவிடக் கொள்கை ஆதரவாளரன் அதனால் நீ ஆசிரியரை திட்டுவதை பொறுக்காமல் எழுதவில்லை
இது உன் மீதுள்ள அக்கறையில் எழுதுவது. நம் தாத்தாக்கள் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகள். அதற்கு பிறகு வாழ்நாள் கடின உழைப்பின் மூலம் சில ஏக்கர் நிலங்களையே வாங்கினார்கள். நம் தலைமுறையில்தான் முதல் முறை பட்டதாரிகளானோம். தமிழகத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகள் இருக்கின்றன.
இருந்தும் நம் குடும்பத்திலோ நம் உறவினர்களிலோ நம் தலைமுறைக்கு முன்பு ஒருவர் கூட பட்டப்படிப்பு படித்ததில்லை. நாமே முதல் படிக்கட்டில்தான் அடியெடுத்து வைக்கிறோம். நம் குழந்தைகள் காலத்திலாவது அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்.
அதற்கு நமக்கு நல்லது செய்வது யார், நமக்கு கெடுதல் செய்வது யார் என்கிற அடிப்படை புரிதல் வேண்டும். நம் குழந்தைகளின் படிப்பை கெடுக்கிறான் நம் வேலையை பறிக்கிறான் என்று கோபப்பட்ட்டால் அது நாம் நமக்காக நம் குழந்தைகளுக்காக பேசுகிறோம் என்று பெருமைப்படலாம்.
நமக்காக நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாடுபடும் தலைவர்களின் மீது வன்மத்தைக் காட்டுவதின் மூலம் நீ உன் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது மண்ணை அள்ளிப்போடுகிறாய்.திராவிடர் கழகம் எனக்கு பணம் தரப்போவதில்லை, நான் ஆசிரியர் வீரமணி அவர்களை ஒருமுறை கூட நேரில் பார்த்தில்லை.
உன்னை எனக்கு பிறந்ததில் இருந்தே தெரியும். அவருக்காக உன்னிடம் சண்டை போடவில்லை.
நம் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்திற்காக புரியவைக்க முயற்சிக்கிறேன்.
You can follow @karthickmr.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.