#திருநெல்வேலி🔥💕

"சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா.!"
இந்த பாட்டு கேட்கும் போது உங்களுக்கு உங்க ஊரு நியாபகம் வருவது இயல்பே.ஆனா அதையும் தாண்டி உள்ளுக்குள்ள ஒரு பெருமையும், அலாதி ஆனந்தமும், விழிகளின் ஓரம் சிறுதுளி ஈரமும் வருவது திருநெல்வேலி காரங்களுக்கு மட்டும் தான்.!😂
ஏன்னா, இன்றைக்கு திருநெல்வேலி தவிர்த்து அதிக அளவில் சென்னை,மதுரை,கோயம்புத்தூர், திருச்சி ன்னு தமிழ்நாட்டுல மட்டும் இல்ல திருவனந்தபுரம்,கொல்லம், கொச்சி,பெங்களூரு,புனே,மும்பை, டில்லி ன்னு இந்தியா முழுவதும் பல முக்கியமான நகரங்களிலும் வளைகுடா நாடுகளிலும் கணிசமான அளவு வசிக்கிறாங்க.!😳
#திருநெல்வேலி 2200 ஆண்டுகளாக (இன்றுவரை) உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நதிக்கரை நகரம்.🙄 அந்நதி #பொருநை நதி என சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட இன்றைய தாமிரபரணி ஆறுதான்.
பாண்டியர்கள் 'தென்பாண்டி நாடு' ன்னும் சோழர்கள் 'முடிகொண்ட சோழமண்டலம்' ன்னும் அப்புறம் வந்த நாயக்கர்கள்
'திருநெல்வேலி சீமை' ன்னும் அழைச்சாங்க.! வேணுவனம், தாருகாவனம், சதுர்வேதி மங்கலம், நெல்லை சீமை இதெல்லாம் ஊரோட பழைய பெயர்கள்.(சுமார் 2000 வருசம் பழசு)🙄

புராணங்களின் படி நெல்லுக்கு,
ஈசன் வேலியாக(நனையாமல்) பாதுகாத்து திருவிளையாடல் புரிந்ததால் 'திருநெல்வேலி' என அழைக்கப்படுகிறது.🙏
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1790 ல்ல திருநெல்வேலி நகரை மையமாக கொண்டு #டின்னவேலி ன்னு மதுரைக்கு தெற்கே உள்ள (திருவிதாங்கூர் சமஸ்தானம் நீங்கலான) அநேக பகுதிகள் உள்ளடங்கிய நிலப்பரப்பை ஒரே மாவட்டமாக நிர்வாக வசதிக்காக உருவாக்குனாங்க.☺️ இதுதான் திருநெல்வேலி மாவட்டம் உருவான கதை.🤗
இதுல இருந்த பல பகுதிகள் இராமநாதபுரம், விருதுநகர் எல்லாம் தனித்தனி மாவட்டமாக உருவாகும் போது அவற்றுடன் இணைக்கப்பட்டது.😕
கொடுத்தது போக மீதியிருந்த மாவட்டத்தை 1986 ல தூத்துக்குடி ன்னும் கடைசியாக 2019 ல தென்காசி ன்னும் பிரிச்சிகுடுத்து தனித்தனி மாவட்டமாக அறிவிச்சிட்டாங்க.!🙄
என்னதான்
#திருநெல்வேலி #தூத்துக்குடி
#தென்காசி ன்னு மூணு மாவட்டமா பிரிச்சாலும் இந்த மாவட்டங்களை இணைக்கும் இழைன்னா அது #தாமிரபரணி ஆறுதான்.எச்சிபாலு குடிச்சு வளர்ந்த அண்ணன் தம்பிங்க மாதிரி,இந்த மூணுமாவட்ட மக்களும் என்றுமே தாமிரபரணி ஆற்று தண்ணி குடிச்சு வளர்ந்த அண்ணன் தம்பிங்கதான்👬
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்,
பனிமய மாதா கோவில் திருவிழா, திருச்செந்தூர் சூரசம்ஹாரம், ஆடித்தபசு,
குற்றால அருவின்னு ஒன்றாக👨‍❤️‍👨 கொண்டாறதுக்கு நிறைய விஷயங்கள் இவங்களுக்கிடையே இருக்கு.💪

"யேலே,
வால,
போல,
இரிலே
என்னல" ன்னு இங்க பேசுற வட்டார தமிழ் கேட்கவே ரொம்ப அழகாக இருக்கும்.!😍
சிவாஜியின் கட்டபொம்மன் பட வசனம் கேட்கும் போதெல்லாம்,
"யேலே, ஜாக்சா யாருலே நீ,
எதுக்கு லே உனக்கு வரி,
எங்களோட வயகாட்டுக்கு வந்திருக்கியாலே,
நாத்து நட்டுருக்கியால,
மாடு மேச்சிருக்கியாலே..!
அப்புறம் என்னத்துக்கு வே ஒமக்கு வரி..!" 😂
ஒருவேளை இப்படித்தான் பேசிருப்பாரோன்னு தோணும்..!🤔
திருநெல்வேலிகாரங்க நல்ல உழைப்பாளிகள்.ஊர சுத்தி பெருசா தொழிற்சாலைகள் கிடையாது. இந்தியா சிமென்டஸ் Factory தான் அங்க உள்ள ஒரே பெரிய தொழிற்சாலை.பஞ்சுமில்லு (Mill) & கங்கைகொண்டான் சிப்காட்லயும் பல நிறுவனங்கள் இருக்குது.!
பீடி சுற்றுவது,தீப்பெட்டி ஒட்டுவது தான் பிரதான குடிசை தொழில்.🔥
அதுமட்டுமல்ல கருப்பட்டி கய்ச்சுவதும், Packed Food Itemsம் தயார் பண்றாங்க.!😋

வற்றாத தாமிரபரணி ஆறு பாயறதுனால விவசாயமும், வியாபாரமும் தான் அங்க உள்ள பெருவாரியான மக்களோட பிரதான தொழில். நிறைவான,எளிமையான வாழ்க்கை முறை.!😊

மீன்பிடித்தலும்,கால்நடை வளர்ப்பும் குறிப்பிடும் படி உள்ளது.
இன்று இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை பட்டதாரிகள் பெரும்பாலும் வேலை வாய்ப்புகள் தேடி பெருநகரங்களை நோக்கி போயிடுறாங்க..! 😕
தெருவுக்கு ஒரு நாலு பேரு, சென்னை, பெங்களூருல இருக்காங்க..!
ஒரு Group என்னடான்னா US, Europe, Singapore ன்னு போய் Settle ஆயிட்டு இருக்காங்க..!🙄
"திருநெல்வேலி‌ ன்னாலே ஏதோ சாதிய வன்முறை மற்றும் கலவரங்கள் நடக்குற ஊருன்னு தான் மதுரைக்கு வடக்கே நிறைய பேரு அப்படித்தான் நினைக்கிறாங்க.!
(ஏதோ வின்னர் படத்துல வர்ற ' இது இரத்த பூமி' Range க்கு)
80, 90 கள்ல நடந்த ஒருசில மோதல்கள் அதுக்கு ஒரு காரணம்.
அது மட்டும் இல்லாமல் ஒரு சில பேரு,
..அவங்களௌட Profile Photo, Status ல அருவா Photo வ போட்டு,
"அன்புன்னா உசுரையும் கொடுப்போம்,
வம்புன்னா உசுரையும் எடுப்போம்"
ன்னு பண்ற அலப்பறைகளும் ஒரு காரணமா இருக்கலாம்..!😂
மத்தபடி சின்ன புள்ளைல ஆரம்பிச்சு, இளவட்டம், பெரியவங்க, வயசாதன தாத்தா வரைக்கும் எல்லாம் நல்லவங்க தான்..!🤫
என்ன, கொஞ்சம் ரோஷமும், வேகமும் ஜாஸ்தி.! மத்தபடி சாமானியர்கள் நிறைந்த பூமி.
ஏரியால போய் Address ன்னு கேட்டா,வீட்டு முன்னாடி கொண்டுபோய் விட்டுட்டு போவாங்க., உதவின்னா கேட்காமலே செய்வாங்க, முக்கியமாக வயசுல மூத்தவங்கள #அண்ணாச்சி, #அக்கா ன்னு மரியாதையா தான் பேசுவாங்க..!😊
திருநெல்வேலி மாவட்டம் மட்டும் தான் இந்தியாவிலேயே ஐவகை நிலங்களையும் ஒருங்கே பெற்ற ஒரு மாவட்டம்..!

⛰️🏞️குறிஞ்சி(மலை சார்ந்த நிலம்) -
பாபநாசம், மாஞ்சோலை, (குற்றாலம்- இப்போ தென்காசி மாவட்டம்)

🌳🌴முல்லை (வனம் சார்ந்த நிலம்) -‌
களக்காடு, முண்டந்துறை, சிங்கம்பட்டி ஜமீன் காடுகள்.
🌾🌳மருதம் (வயல் சார்ந்த நிலம்) - மாவட்டத்தின் மத்தியில் உள்ள அநேக நகரங்கள் மற்றும் ஊர்கள்.

🌊🏖️நெய்தல் (கடல் சார்ந்த நிலம்) - உவரி, குட்டம், கூடன்குளம்.

🏜️🌵பாலை ( மணல் சார்ந்த நிலம்) - நான்குநேரி, திசையன்விளை பகுதிகளை சுற்றியுள்ள தேரி மணற்பரப்புகள்.
(செம்மண்)🙄
District Science Center - தான் இங்க உள்ளவங்களுக்கு Cubbon Park, Lalbagh எல்லாம். பொழுபோக்குன்னா ஊர சுத்தி நிறைய தியேட்டர், கோவில் குளம்ன்னு இருக்கு.பாளை VOC மைதானம் ஒரு Relaxation Hub. நண்பர்களுடன் ஆற்றுக்கு போய் அரட்டை அடிச்சு, குளிச்சு, கும்மாளமிடுவது விடலைகளின் வானவேடிகை.!😂
திருநெல்வேலி பற்றிய சிறப்பு தகவல்கள்..!

🔥 திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள். (Hyderabad, Secunderabad மாதிரி)

🔥பாளையங்கோட்டை 'தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படுகிறது. (அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால்)

🔥தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் அநேகம் பேர்
திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களே..!👌

🔥நெல்லை சந்திப்பில் 1973 ல் கட்டப்பட்ட
'திருவள்ளுவர் மேம்பாலம்' தான் இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் இரண்டு அடுக்கு மேம்பாலம். ஆசியாவிலேயே இரயில் பாதைக்கு குறுக்கே கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலமும் கூட.😳
🔥நெல்லைக்கு புகழ் சேர்க்கும் அல்வாவை நெல்லைக்கு அறிமுகப் படுத்தியவர்கள் 1930 களில் இங்கு வந்த இராஜஸ்தானியர்களே.!😳
திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தவர்களும் அவர்கள்தான்😂

🔥 நெல்லையப்பர்கோவில் இசைத் தூண்களில் ஒவ்வொரு தூணிலும் வெவ்வேறு ஸ்வரங்களை இசைக்கருவி இசைப்பது போல கேட்கலாம்.🎶
🔥 தமிழ்நாட்டில இருக்கும் மொத்த எருமை மாடுகளில் 🐃பாதிக்கும் மேல் திருநெல்வேலி ல தான் இருக்கும். 😂

🔥இந்தியாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான கூடன்குளம் அணுமின் நிலையம் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடன்குளம் கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ளது.🙄
அருவிகள்,மலைகள்,அணைகள், ஆறுகள்,காடுகள்,ஆலயங்கள் ன்னு இங்கே சுத்தி பார்க்க சுற்றுலா தலங்கள் நிறைய இருக்குது.நெல்லை மக்களின் விருந்தோம்பல் குணம் சிறப்பானது.!😍
இன்னும் நிறைய ஊர் பெருமைகளை பேசுவோம்.!🌾

(அப்படியே நெல்லை என்றவுடன் நினைவில் வருவதை POLL பண்ணிடுங்க.!)😂
நன்றி மக்களே.!🙏
You can follow @theroyalindian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.