1/ இங்கே தமிழகத்தில் சாதியை பற்றி பேசும் போதெல்லாம், கோவில் கருவறைக்குள் எங்களை விடுவீர்களா என்று சிலர் கேட்கிறார்கள்..
அப்படி கேட்பவர்கள் யாரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களோ, பக்தி கொண்டவர்களோ இல்லை.
நாத்திகர்களும், அரசியல்வாதிகளும் சொல்லிக் கொடுப்பதை வைத்து பலர்
2/ பேசுகிறார்கள்.
இந்த ஜாதியை சேர்ந்தவர்தான் அர்ச்சகராக,பூசாரியாக வர வேண்டும் என்று எந்த கடவுளும் கேட்கவில்லை.
ஆனால், கோவில்கள் கட்டப்படும் போது, ஒவ்வோர் கோவிலும் ஒவ்வொரு ஆகமப்படி கட்டப்பட்டுள்ளது.
ஆகமங்கள் லிஸ்ட் பதிவிட்டால் நேரமாகும்.
அரசர்களும் மதகுருக்களும் நிர்ணயம்
3/ செய்தது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
உள்ளே சொல்லப்படும் மந்திரங்களும் அப்படித்தான்.
அந்தந்த கோவிலுக்கான ஆகம விதிகளையும் மந்திரங்களையும் முறையுடன் கற்று கருவறைக்குள் நுழைய முயன்றால், அந்த இறைவனே ஏற்றுக் கொள்வார்.
மனிதன் தடை செய்ய முடியாது.
நந்தி வழி விட்டு தரிசனம்
4/ செய்த நந்தனாரையும், கறி படைத்து பூசை செய்த கண்ணப்பரையும் நாம் அறிவோம்.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் அனைவரும் பிராம்மணர்கள் அல்லர்.
வைணவக் கோவில்களில் தலையில் வைக்கப்படும் சடாரியில் உள்ள பாதங்கள் நம்மாழ்வார் என்னும் பிராம்மணர் அல்லாதவருடையது.

ஸ்ரீ ரங்கம் கோவிலில் பூஜை
5/ செய்பவர்கள் சிதம்பரம் கோவிலில் செய்ய முடியாது..
வேறு வேறு ஆகமங்கள்.
இந்த இரண்டு கோவில்களிலும் அர்ச்சனை செய்பவர்கள், மற்ற கோவில்களில் செய்ய முடியாது.
சுமார், 17000 கோவில்களில் பிராம்மணர் அல்லாதோர் பூஜை செய்கிறார்கள்.
அங்கே எந்த பிராம்மணனும் கருவறைக்குள் செல்ல முடியாது..
6/ வேறு வேறு விதி முறைகள்..
சபரிமலை ஐயன் கோவிலில் வருடம் ஒருமுறை ஒரு நம்பூதிரி, மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுகிறார்.
அவரைத் தவிர யாரும் உள்ளே செல்ல முடியாது.
இன்று பிராம்மணர்கள் பலரும் வேதங்கள் கற்பதை விட்டு விட்டு வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். இந்த நேரம் மற்றவர்கள் ஏன்
7/ அந்த வேதங்களை அந்தந்த கோவில் ஆகமப்படி பயிலக் கூடாது?
முடியாது. நான் படித்தபடிதான் பூஜை செய்வேன் என்று கூறுவது விதண்டாவாதம்..
ஒரு டாக்டருக்கு படிக்காமல், எனக்கு தெரிந்த மருந்தை கொடுப்பேன் என்றால் நியாயமா?
டாக்டருக்கு படித்து விட்டு சர்ஜரி படிக்காமல், நான் டாக்டர், அதனால்
8/ ஆபரேஷன் செய்வேன் என அடம் பிடிக்க முடியுமா?
ஒரு ENT படித்த டாக்டர் open heart surgery செய்ய முடியுமா?
இன்று திருப்பதியில் எல்லோரும் வேதம் கற்றுக் கொள்கிறார்கள்.
ஆர்வமும், பக்தியும்தான் காரணம்..
இறைவன் முன் அனைவரும் சமமே..
அவன் அவதாரங்கள் எல்லா ஜாதியிலும் இருந்திருக்கின்றன..
9/ யார் ஒருவர் பக்தியுடன் எதை செய்தாலும் அதை ஏற்பான்.
ஆனால், அதற்காக கோவில் ஆகம விதி முறைகளை மீறி நான் என் விருப்பப்படிதான் செய்வேன் என்றால், அங்கே பக்தியில்லை.
ஆணவம்தான் தெரிகிறது..
பக்தி இலக்கியங்கள் பாடி இறைவனை நேரில் தரிசித்த பல மகான்கள் பிராம்மணர்கள் கிடையாது.
இன்றும்
10/ பக்திப் பாடல்கள் பாடி மிகவும் சிறப்பாக போற்றப்படும் பலரும் பிராம்மணர்கள் கிடையாது.
பாடுவதை அனைவரும் செய்யலாம்.
பக்தியோடு செய்பவருக்குத்தான் இறைவன் புகழை தருகிறான்.
ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடலுடன்தான் தினமும் சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது..
டிஎம்எஸ் சீர்காழி
11/ வாரியார் ஸ்வாமிகள் இவர்கள் எல்லாம் இறைப்பணியில் புகழின் உச்சத்தில் இருந்தவர்கள்.
குருவாயூர் கோவிலில் மற்ற மதத்தினருக்கு உள்ளே அனுமதியில்லை.
ஆனால் நீண்ட காலத்துக்கு பிறகு ஜேசுதாஸ் உள்ளே சென்றார்.
பக்தி தான் காரணம்...
பிராம்மணர்கள் கூட வேதமோ, இல்லை ஆகமமோ தெரிந்தவர்
12/ மட்டும்தான் கருவறைக்குள் செல்லலாம்.
அவர்களின் உறவுகள் கூட செல்ல முடியாது..
எனவே, கருவறைக்குள் சென்று பூஜை செய்ய தேவை பக்தியும், முறையான அந்த கோவிலுக்கான ஆகம விதிகளை கற்றுக் கொள்ளுதலும் தான் முக்கியம்.
ஜாதிகள் அல்ல..
காலப் போக்கில் நிச்சயம் இது போல அனைவரும் சென்று பூஜை
13/ செய்ய வேண்டிய கட்டாயம் வரும்.
அப்போது நாத்திக வாதம் பேசிக் கொண்டோ, என் விருப்பம் போலத்தான் பூஜை செய்வேன் என்று கூறிக் கொண்டு வராதீர்கள்.
இது ஒரு வேலை இல்லை.
இது இறைவன் சேவை.
பக்தர்களாக தரும் அன்பளிப்பை ஏற்கலாமே தவிர கட்டாயப்படுத்தி கேட்க முடியாது.
இன்று வரை அதுதான்
14/ நடக்கிறது.
இந்துக்கள் அனைவரும் அறிய வேண்டியது இதுதான். பரிபூரண பக்தியுடன், படிக்க வேண்டியதை படித்து விட்டு வந்தால், இறைவன் இரு கரம் நீட்டி வரவேற்பதை எந்த மனிதராலும் தடுக்க முடியாது. நம் வாழ்விலேயே
எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை.
எது கிடைக்கிறதோ, அதுதான் நிதர்சனம்.
15/ நாம் நம் கடமையை சரியாக செய்தால் நமக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்.
இல்லையென்றாலும், நம் சந்ததிக்கு கிடைக்கும்.
இறைவனை முழுமையாக நம்பி செயல்படுங்கள்.
இதற்கு முன்னால் நடந்தவை எல்லாமே அவன் நினைத்தபடிதான்.
நாம் சொல்லிக் கொள்ளலாம், அவர் செய்தார், இவர் செய்தார் என்று.
16/ இறைவன் நல்லன செய்ய அவர்களை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
கருவறைக்குள் சென்று பூஜை செய்ய விரும்பினால், அதற்குரிய பக்தியோடு, தகுதியோடு இறைவனை நினையுங்கள். அவன் நிறைவேற்றி வைப்பான்.
மனிதன் எழுதிய சட்டங்களை விட, இறைவன் சொன்ன தர்மத்திற்கு பலம் அதிகம்.
இதை சொல்லி புரியாது.
17/ அவரவர் உணர்வில்தான் புரியும்..
ஒரு அலுவலகத்தில் வேலை செய்யவோ, ஒரு மருத்துவ மனைக்கு செல்லும்போதோ, ஓரு வீட்டிற்கு சாப்பிடப் போகும்போதோ, அவர்கள் சட்டப்படிதான் நாம் செயல்படுகிறோம்..
அதே போல, கோவிலுக்கு சென்றாலும் சரி, கருவறைக்குள் நுழைய வேண்டும் என்றாலும் சரி அந்த
18/ சட்டதிட்டத்தை
மதித்து நடங்கள்.
இறைவன் அருளால், தானே நினைத்தது நடக்கும்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யாமறியோம் பராபரமே..
லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து...
ஸர்வோ ஜனா ஸுகினோ பவந்து...
You can follow @aarjeekaykannan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.