ஒரு ஹாலிவுட் கதை.
நம்ம ஹீரோ படு சுட்டி. ஆரம்பத்துல ஒரு DJவா இருக்கார். அப்படியே கொஞ்ச காலம் கழிச்சு ஒரு சேல்ஸ்மேனா ஒரு கம்பனில சேருறார். சேர்ந்த இடத்துல கொஞ்ச காலத்துலயே சுறுசுறுப்பாக வேலைகளை செய்றார்.
நம்ம ஹீரோ படு சுட்டி. ஆரம்பத்துல ஒரு DJவா இருக்கார். அப்படியே கொஞ்ச காலம் கழிச்சு ஒரு சேல்ஸ்மேனா ஒரு கம்பனில சேருறார். சேர்ந்த இடத்துல கொஞ்ச காலத்துலயே சுறுசுறுப்பாக வேலைகளை செய்றார்.
கம்பெனி தயாரிப்புகளை விற்பனை செய்வது அவருக்கு கை வந்த கலையாக இருக்கு. ரொம்ப சின்ன வயசுலயே அதிக sales target பண்ணி காட்டுறார். நிறைய கமிசன் வருது. வருமானம் அதிகமாகுது.
அவரோட திறமை, உழைப்பு எல்லாம் பார்த்துட்டு கம்பெனி அவரை சேல்ஸ்மேன்ல இருந்து training officer ஆ ஆக்குது. புதுசா வர்றவங்களுக்கு sales training கொடுப்பது அவர் புதிய வேலை. அதையும் விரும்பி மிகச் சிறப்பா பண்றார். ரொம்ப சின்ன வயசிலேயே பெரிய பொறுப்பு அது.
பல ஊர்களுக்குப் போயி பல குழுக்களுக்கு training குடுக்குறார். அவரை அழைச்சு பாராட்டி Outstanding employee award குடுக்குறாங்க.அவரின் 20கள் தொடக்கத்தில் கிடைத்த இவ்ளோ பெரிய அங்கீகாரம் ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்தது.
விழால சொற்பொழிவ முடிச்சிட்டு தன் புது Ford mustang car ல மகிழ்ச்சியா வீட்டுக்கு திரும்பிட்டு இருக்கார். திடீர்ன்னு ஒரு ட்ரக் வந்து இவர் கார் மேல மோதுது. ட்ரக் டிரைவர் குடிபோதைல செய்த தவறு நல்லா போயிட்டு இருந்த ஹீரோ வாழ்க்கையையே ஒரு நொடியில் நசுக்கி போடுது.
மீட்புப்பணியினர் அவரை அள்ளிப்போட்டு மருத்துமனைக்கு கூட்டிட்டு போறாங்க.
11 இடங்கள்ல எலும்பு முறிவு.
தலைல அடி, இரத்தக் கசிவு.
6 நிமிடங்கள் இதயத்துடிப்பு இல்ல. ஹீரோ உயிரோடயே இல்ல.
11 இடங்கள்ல எலும்பு முறிவு.
தலைல அடி, இரத்தக் கசிவு.
6 நிமிடங்கள் இதயத்துடிப்பு இல்ல. ஹீரோ உயிரோடயே இல்ல.
திடீர்ன்னு பல முயற்சிகளுக்குப் பின் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பிக்குது. அறுவை சிகிச்சை நடந்து முடியுது. ஹீரோ கோமாக்கு போயிடுறார்.
சில வாரங்கள்ல அவர் நினைவு திரும்பிடுறார். மோசமான காயங்களால மூளை, நரம்பு மண்டலத்தின் சில பகுதி பாதிப்படைஞ்சு இருக்கு. டாக்டர்கள் இனி இவர் எழுந்து நடப்பது சாத்தியமில்லைன்னு சொல்லிட்டு போறாங்க.
நினைவு திரும்பியது மகிழ்ச்சின்னாலும், நடக்க முடியாதுன்னு சொன்னது வருத்தப்பட வச்சது. ஹீரோ, அவர் குடும்பம் மற்றும் நண்பர்கள் நடந்தத நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க. ஹீரோ ஒரு பெருமூச்சு விட்டார்.
ஹீரோவோட குரு ஒரு தாரக மந்திரம் சொல்லியிருந்தது. வாழ்க்கைல நமக்கு நடக்குற கெட்ட விசயங்களை தவிர்க்க முடியாது. முதல்ல ஏத்துக்கணும். இரண்டாவது ஐஞ்சு நிமிசத்துக்கு மேல அதைப்பத்தி வருத்தப்படக் கூடாதுன்னு சொன்னத நினைச்சுப் பார்க்குறார். உடனே,
நான் கண்டிப்பா எழுந்து நடப்பேன். ஒரு வேளை முடியலன்னா இந்த உலகத்துலயே வீல்சேர்ல வலம் வர்ற மகிழ்ச்சியான மனிதனா இருப்பேன்னு எல்லார்ட்டையும் சொல்றார். டாக்டர்கள் அவர் ஏதோ மனஉளைச்சல்ல இப்பிடி சொல்றார்ன்னு சொன்னாங்க.
மறுநாள்ல இருந்து மருத்துவமனைல எல்லார்ட்டையும் படு ஜாலியா பேசிட்டு, ஜோக் அடிச்சிட்டு செம positive ஆ நாட்களை நகர்த்துறார். டிஸ்சார்ஜ் ஆயி வீட்டுக்குப் போறார். அவர் attitude கொஞ்சம் கூட மாறல.
நடக்க முயற்சி பண்ணி, பண்ணி அதிசயமா 3 வாரங்கள்ல எழுந்து நடக்க ஆரம்பிச்சுர்றார். டாக்டர்களால இந்த நிகழ்வை நம்பவே முடியல. நடக்க ஆரம்பிச்சதும் உடம்பை நல்லா மெருகேத்துறார். தினமும் ஒடுறார். அப்படியே பயிற்சி பண்ணி, பண்ணி ஒரு வருடத்தில் முழு மராத்தான் ஓடி முடிக்கிறார்.
ஒரு வருடம் முன்ன வீல் சேர்ல இருந்த ஹீரோவை பார்த்த யாரும், இவர் ஒரு முழு மாரத்தான் பின்னாட்களில் ஓடுவார்ன்னு சொன்னா யாரும் நம்பியிருக்க மாட்டாங்க. ஹீரோவோட நம்பிக்கையும், positive attitude மட்டுமே இதை சாத்தியமாக்குச்சு.
வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்குப் போறார். தொழில் தொடங்குறார். அழகான ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறார். எல்லாம் நல்லாவே போயிட்டு இருந்தது. 2008ல பொருளாதார வீழ்ச்சி அடைஞ்சு அமெரிக்காவே நிலை குலைந்து போகும் வரை.
தொழில் முடங்குது.
நட்டம்.
50000$ கடன்.
சொந்த வீடு, சொத்துக்கள் எல்லாம் விற்க வேண்டிய நிலை.
இருந்தும் ஹீரோ தன்னோட positive attitude ஆ மாதிக்கல. ஹீரோ மனைவி, இந்த நிலைமை எல்லாம் சரியாக ஆலோசனை வேண்டி தன் நண்பர் ஒருவரை போயி பார்க்க சொல்றாங்க.
நட்டம்.
50000$ கடன்.
சொந்த வீடு, சொத்துக்கள் எல்லாம் விற்க வேண்டிய நிலை.
இருந்தும் ஹீரோ தன்னோட positive attitude ஆ மாதிக்கல. ஹீரோ மனைவி, இந்த நிலைமை எல்லாம் சரியாக ஆலோசனை வேண்டி தன் நண்பர் ஒருவரை போயி பார்க்க சொல்றாங்க.
ஹீரோ அவர் மனைவி சொன்ன நண்பரை போயி பார்க்குறார். அந்த நண்பர் எல்லாம் கேட்டுட்டு இப்போ நான் உங்களுக்கு என்ன ஆலோசனையும், டிப்ஸும் குடுக்கப் போறதில்லை. நீங்க இரண்டு விசயங்களை மட்டும் தொடந்து பண்ணுங்க.
1. தினமும் உடற்பயிற்சி பண்ணுங்க
2. நிறைய படிங்க
நீங்க போலம்ன்னு சொல்லிடுறார்.
1. தினமும் உடற்பயிற்சி பண்ணுங்க
2. நிறைய படிங்க
நீங்க போலம்ன்னு சொல்லிடுறார்.
ஹீரோக்கு ஆலோசனை கேட்க வந்தவரை நினைச்சு முதலில் கோவம் வந்தது. முட்டாள்தனமா தோனுச்சு.
சரி! இந்த இரண்டையும் பண்றதால நட்டம் ஏதும் ஆகப் போறதில்லன்னு தினமும் சீக்கிரமே எழுந்து உடற்பயிற்சி, புத்தகவாசிப்பு இரண்டும் பண்ண ஆரம்பிக்கிறார்.
சரி! இந்த இரண்டையும் பண்றதால நட்டம் ஏதும் ஆகப் போறதில்லன்னு தினமும் சீக்கிரமே எழுந்து உடற்பயிற்சி, புத்தகவாசிப்பு இரண்டும் பண்ண ஆரம்பிக்கிறார்.
சில மாசங்கள்ல அவரையே அறியாம பல மாற்றங்கள் நடக்குது. சீக்கிரமே ஒரு நாளை தொடங்கும் போது தான் என்னென்ன செய்யணும்ன்னு அவரால Plan பண்ண முடிஞ்சது. தொழில் சம்பந்தப்பட்ட விசயங்கள் அன்னைக்கு என்ன செய்யணும்ன்னு list போட முடிஞ்சது.
எல்லா விசயங்களும் Plan பண்ணி முடிக்கிறதால தொழிலில் முன்னேற்றம் கிடைச்சது. ரொம்ப சீக்கிரமாவே தன் கடன்களில் இருந்து மீள்றார் ஹீரோ. தன்னோட பழைய வீட்டைக் காட்டிலும் பெரிய வீட்டுக்குப் போறார். நிறைய சம்பாதிக்கிறார். தன்னோட அனுபவங்களை ஒரு கோட்பாடா வரையறுக்குறார்.
ஹீரோ நண்பர் சொன்ன 2விசயங்களோட இன்னும் 4விசயங்கள் சேர்த்து தினமும் இந்த 6 விசயங்கள செய்துட்டு வந்தா நாம வாழ்க்கைல நினைச்சதை சாதிக்கலாம்ன்னு சொல்றார்.
அந்த 6விசயங்களை அப்புறம் பார்ப்போம். இதெல்லாம் அவர் ஒரு புத்தகமா வெளியிடுறார். 2மில்லியன் புத்தகங்கள் விற்பனை ஆகுது. பெரிய மில்லினியர் ஆயிடுறார். கதை முடியல.
நிறைய பயிற்சி வகுப்புகள், சுயமுன்னேற்ற கருத்தரங்குகள் எல்லாம் பங்கேற்று வர்றார். 2016ல திடீர்ன்னு இவரோட இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் ஒன்னொன்னா பிரச்சனை பண்ணுது. மிக அரிதான லுக்கோமியான்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வருது.
மனுசன் கொஞ்சம் கூட அசரல. நடக்குறது நடக்கட்டும்ன்னு மகிழ்ச்சியோட சிகிட்சையை எடுக்க ஆரம்பிக்கிறார். 30% பிழைக்கும் வாய்ப்பு இருந்தது. ஹீமோதெரபி பண்ணி, தன்னோட தன்னம்பிக்கையும், மனவலிமையும் கை குடுக்க புற்றுநோயை தோற்கடிக்கிறார்.
மீண்டும் தான் யாரென்று நிறுப்பிக்கிறார்.
மீண்டும் தான் யாரென்று நிறுப்பிக்கிறார்.
முன்ன விட இன்னும் பலரை சந்திக்கிறார். புத்தகங்கள் எழுதுறார். உடைந்து சோர்வா இருக்கும் பலருக்கு வாழும் உதாரணமா இருக்கிறார் நம்ம ஹீரோ.
அவர் பேரை சொல்லிடுவோம்.
அவர்தான் Hal elrod.
அவர் சொன்ன ஆறு விசயங்கள்
Silence, Affirmation, Visualisation, Exercise, Reading, Journal.
அவர் பேரை சொல்லிடுவோம்.
அவர்தான் Hal elrod.
அவர் சொன்ன ஆறு விசயங்கள்
Silence, Affirmation, Visualisation, Exercise, Reading, Journal.