மூணாரை என்ற ஊரை விவரிக்க சொர்க்கம் என்று வார்த்தை நிஜமாகவே போதாது. (இழை)
கோவையில் இருந்து சுமார் நாலரை மணி நேரத்தில் உடுமலைப்பேட்டை வழியாக மூணாரை அடைந்து விடலாம். ஆனால் ஜூன் ஜூலையில் மழை பெய்வதால் உருவாகும் குட்டி குட்டி அருவிகளை நின்று ரசித்து கொண்டே போனால் ஏழு எட்டு மணிநேரம் கூட போதாது
உடுமலை செக் போஸ்ட் காரை திறந்து வைத்திருந்தால் யோசிக்காமல் உள்ளே நுழைந்து தின்பது கிடைத்தால் ஆட்டையை போட நமது பங்காளிகளாக குரங்குகள் தேடுவார்கள், எனது காரில் சறுக்கி விளையாடிய போது இவர் கண்ணாடியை பிடித்து வழுக்கிக்கொண்டு வந்த போது கீச் என்று வந்த சப்தம் இன்னமும் நினைவிருக்கிறது
உடுமலை தாண்டி செக் போஸ்ட், அன்பின் தமிழ்காவலர்கள் மூன்றுமுறை சோதனை என்ற பெயரில் ஒவ்வொன்றிலும் 30ரூபாய் வாங்கிக்கொண்டு எதையும் சோதனை செய்யாமல் கேரளாவிற்குள் விடுவார்கள். கேரள செக் போஸ்டில் காசு கொடுத்தால் காறி உமிழ்ந்து வாகனத்தை முழு சோதனையிட்டு பிளாஸ்டிக் அகற்றி அனுமதிப்பார்கள்
உள்ளே நுழைய ஆரம்பிக்க வேண்டியதுதான். அதன்பின் சாலை ஒற்றை ரோடும் மழையும் இருப்பதால் மிக பாதுகாப்பாக ஓட்ட வேண்டியது அவசியம்.
முதல்நாளுக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே எடுத்து செல்வது பழக்கம். நல்ல உணவென்பது மூணாரில் கிடைக்கும்,
வழியில் மற்ற உணவகங்கள் மிக மோசமாக இருக்கிறது. பிரட் ஆம்லெட் நம்பி உண்ணலாம் நாங்கள் கொண்டு சென்ற உணவை இந்த அருவியின் கால் நனைத்துக்கொண்டே சாப்பிட்டது அழகான அனுபவம்
அடுத்தது லேக்கம் என்ற சிறிய அருவி வருகிறது. ஒரு மணி நேரம் சிறுவர்கள் மற்றும் நாம் நீரில் விளையாடலாம். பக்கத்தில் சிறிய கடைகள் இருக்கும், டீ காப்பி கூட சாப்பிட தகுதியில்லாதவை. ரிஸ்க் வேண்டாம்.
அடுத்தது இரவிகுளம் பார்க்கை தவறவிடாதீர்கள், டிக்கெட் வாங்கி விட்டால், அவர்களே வனத்திற்குள் அழைத்து செல்வார்கள், வெகு உயரத்தில் இருந்து அருவி பேருந்தின் மேல் விழும் அழகு கண் நிறையும். படபட வென நீர் பேருந்தின் மேலும் நம் மேலும் அடிக்கும்போது நம் குழந்தை பருவம் திரும்பும்
97 கி.மீ. பூங்கா, அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடம். நீலக்குறிஞ்சிகள் ஆண்டு முழுவதும் பூத்திருக்கும். அழிந்து வரும் அரிய வகை உயிரினமான வரையாடு இங்கே காணலாம். மழைக்கு இவனை இப்படி கவர் செய்தோம்
மூணாறுல நாங்க ஒரு நெஸ்ட்ன்னு ஒரு பட்ஜெட் ரிசார்ட்ல தங்கிருந்தோம், இது மூணார் சிட்டில இல்ல, ஏழு எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது
அப்போ எனக்கு அங்கே தங்க Gift Card, make my tripல 30% offer + break fast complimentary. Room and food is OK. ஆனா அதோட பால்கனி வியூ செம்ம சூப்பர்
அப்புறம் Tour Placeன்னு சொன்னாவே நான் ஜெர்க் ஆகிடுவேன், அதெல்லாம் பயணிக்கு செட்டாகாதுங்கிற மனநிலைதான். இருந்தாலும் இதெல்லாம் நல்லாவே இருக்கும். மழை தட்டி எடுத்தால இந்த போட்டோ சரியா வரல. மற்ற Tour இடமெல்லாம் கோவாலு (Google) கிட்ட கேளுங்க
Top Point மிஸ் பண்ணிடாதீங்க, காலையிலேயே போய்டுங்க, மேகம் காலுக்கு கீழே இருக்கும். கண்டீப்பா பார்க்க வேண்டிய இடம்.
பொதுவா கேரளால எனக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா, சுத்தம். சின்ன பேப்பர் கீழ கிடந்தாலும் உடனே சுத்தம் பண்ணிடறாங்க, இயற்கையை அழகா வச்சிக்கிறாங்க, பாதுகாக்கறாங்க...
வேதனை என்னென்னா நம்ம ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா வன பாதுகாப்பு, பராமரிப்பு கூட்டம் எதுக்கு இருக்குன்னே...
மேலும் சில புகைப்படங்கள்
அவ்ளோதான் டீ முடிஞ்சு போச்சு...
நன்றி வணக்கம்
You can follow @RoyalEnfieldu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.