உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இந்தியாவில் முதன் முதலாக 2007ஆம்ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கு முன்பு கிடையாது. அதன்படி SC,ST,OBC ஆகிய பிரிவினருக்கும் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் சொல்லுகிறது.
இந்தியாவின் மாநிலங்களில் 26 மாநிலங்கள் மத்தியத்
தொகுப்புக்கு மருத்துவ இடங்களை வழங்குகின்றன.
UGயில் 15 சத இடங்களும், PGயில் 50 சத இடங்களும்
மத்தியத் தொகுப்புக்கு வழங்கப் படுகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் இடங்கள் அகில இந்திய
கோட்டா இடங்கள் (ALL INDIA QUOTA) எனப்படும்.
டாக்டர் மன்மோகன்சிங் அரசு 2007 முதல் இந்த அகில
இந்திய கோட்டா இடங்களில், SC, ST பிரிவினருக்கு
இட ஒதுக்கீடு வழங்குகிறது. (கவனிக்கவும்: SC, ST
பிரிவினருக்கு மட்டும்தான்). OBCக்கு வழங்கவில்லை. அப்போது திமுக உட்பட எந்த தமிழக அரசியல் கட்சியும் ஆளும் காங்கிரஸ் அரசை கேள்வி கேட்கவில்லை.
SC,STக்கு இட ஒதுக்கீடு வழங்கச் சொல்லும் அதே
அரசமைப்புச் சட்டம்தான் OBCக்கும் உயர் கல்வி
நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கச் சொல்கிறது. அரசமைப்புச் சட்டம் 93ஆவது திருத்தம் 2005
என்பது ( 93 of 2005) OBCக்கு உயர்கல்வியில் இட
ஒதுக்கீடு வழங்கச் சொல்கிறது.
இத்திருத்தம் 2006 ஆம் ஆண்டிலேயே நிறைவேறி விட்டது ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்ன செய்தது?

SC, STக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியது. ஆனால்
OBCக்கு வழங்க மறுத்து விட்டது. இது என்ன நியாயம்?
ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒரு கண்ணில் சுண்ணாம்பா?
மன்மோகன் சிங் இந்த முடிவை எடுத்து #OBC க்கு
துரோகம் செய்த போது, மன்மோகன் சிங் அரசில்
சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி
ராமதாஸ்! இதை யாராவது மறுக்க முடியுமா?
அன்புமணி ராமதாஸ் மட்டும் அல்ல OBC நலன்களின் பாதுகாவலர் என போலி வேஷமிடும் திமுகவினர் பலர் அப்போதைய அமைச்சர்கள்.
திமுகவினர் பலர் அப்போது மன்மோகன் சிங்கின்
அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து
துரோகத்துக்கு துணை போயினர். ஆ ராசா, தயாநிதி மாறன், டி ஆர் பாலு ஆகியோர்
மத்திய அமைச்சர்களாக இருந்து துரோகம்
செய்தவர்கள் ஆவர். இதை யாராவது மறுக்க
முடியுமா?
தற்போது ஆளும் அரசுக்கு எதிரானோர், மருத்துவப் படிப்பில்
அகில இந்திய கோட்டாவில் OBCக்கு கடந்த
மூன்றாண்டுகளாக இடஒதுக்கீடு (27சதம்)
வழங்கப்படவில்லை என்கிறார். மூன்றாண்டுகளாக
அல்ல, கடந்த 14 ஆண்டுகளாகவே (2007 முதல்) OBCக்கு வழங்கப்படவில்லை என்கிறேன் நான்.
மூன்றாண்டுகளாக OBCக்கு இடஒதுக்கீடு இல்லை என்று சொல்லும் நீங்கள்
இந்த மூன்றாண்டுகளாக மௌனம் காத்தது ஏன்?

3 ஆண்டு முன்தான் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதாக இருக்குமாயின், மறுக்கப்பட்ட முதல் ஆண்டிலே அதே எதிர்த்து குரல் கொடுக்காமல் இப்போது போராட்டம் என்ற பெயரில் மக்களை தூண்டி விடுவது ஏன்?
மருத்துவப் படிப்பில் அகில இந்திய கோட்டாவில் (15%)
OBCக்கு இட ஒதுக்கீடு இதுவரை இருந்ததே இல்லை என்பதை மறைத்து இப்போது ஆளும் மத்திய அரசு மேல் குற்றம் சாட்டுவது ஏன்?
மக்களிடம் விசயம் போய் சேர @MaridhasAnswers ஒரு வீடியோ போடுவது தான் ஒரே வழி.

இது என்னோட தனிப்பட்ட கருத்து. 🙏
You can follow @karthik_nmkl.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.