ஆடி வெள்ளி ஆன்மிக திரேட்:-

ஆடி மாதம் கூழ் ஊற்றுவது எதற்கு?

நாம் முன்னோர்கள் நமக்கு சொல்ல வருவது என்ன?

ஒரு வருடத்தில் இரு அயனங்கள்,

தை முதல் ஆனி வரை உத்தராயனம்.

ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம்.

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம்.
பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம்.

சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் வந்துவிட்டாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி விடும்.
அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ். ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம். இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை,பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி, துக்கம் தாங்க முடியாமல் துடித்தார்.

பின்னர் தன்னுடைய உயிரையும் விட முடிவு செய்த ரேணுகாதேவி, தீயை மூட்டி அதில் இறங்கினார்.
அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து தீயை அணைத்தான்.

இருப்பினும் தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்

பின்னர் பசியைப் போக்கிக் கொள்ள அருகில் இருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டார்.
அங்குள்ள மக்கள் அவருக்கு பச்சரிசி,வெல்லம்,இளநீரை கொடுத்தனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார், ரேணுகாதேவி.

அப்போது அவர் முன்பாக தோன்றிய ஈசன் உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும்.

கூழ் சிறந்த உணவாகும் இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்,
என வரம் அளித்தார்.

இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில்தான், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது என முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்ட கதை,

தெய்வபக்தியின் மூலமாக அறிவியலை புகுத்தினார்கள் நாம் முன்னோர்கள்.
தொழில்நுட்பமும், அறிவியலும் வளர்ந்த இக்காலத்திலும், நமது முன்னோர்ககளை தொடர்ந்தவர்கள் கிராமத்தில் தான் அதிகமாக உள்ளனர்.

அதனால் தான் ஆடி மாதம் கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது,

ஏன் ஆடியில் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு ?ஏன் இத்தனை திருவிழாக்கள்..?
என்று ஆராயப் போனால் அதில் இருக்கிறது நம் தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமையும், மனிதநேயமும், மருத்துவ அறிவும்!

பொதுவாக அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது. அந்தக் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்து, கொத்துக் கொத்தாக
மனித உயிர்களைப் பலி வாங்கும் அது எப்படி வருகிறது, எப்படிப் பரவுகிறது என்று அறியாமலே உயிர்களை இழந்தார்கள்.

அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாக தோன்றியதுதான் அம்மன் வழிபாடு
அம்மை நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவது மாரியம்மன்தான் என்றும் காலரா நோயிலிருந்து காப்பாற்றுவது காளியம்மன்தான்
என்றும் முடிவுசெய்து அதற்கான வழிபாடுகளைச் செய்தார்கள் சூடு தணிக்கும் உணவையே பிரசாதமாக விநியோகித்தார்கள்.

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும்.
அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மழையை அவர்கள் தெய்வமாகவே வழிபட்டு வேண்டினார்கள்.

கொற்றவை வழிபாடு நம் தொன்மை காலத்தில் இருந்தே இருக்கிறது.
எதிரியை அழிக்க புறப்படும்போது கொற்றவையை வழிபட்டுவிட்டுத்தான் கிளம்பினார்கள் மன்னர்களும் வீரர்களும் இந்தக் கொற்றவைதான் பிற்காலத்தில் காளியாகவும் துர்கையாகவும் மாறியது.

காலரா எனும் அரக்கனை அழிக்க காளி எனும் கோர தோற்றமுடைய தெய்வத்தையே நம்பினார்கள் அதனால் காளியை வணங்கினார்கள்.
குளிரக் குளிர அபிஷேகம் செய்தார்கள் கூழ்வார்த்து விநியோகித்தார்கள்.

காளியம்மன், மாரியம்மன் என்று தொடங்கிய வழிபாடு இன்னும் பெருகி துர்கையம்மன், நாகாத்தம்மன், வேம்புலியம்மன், பச்சையம்மன், செல்லியம்மன் என்று மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் அமைந்தது.
அதிலும் விவசாய வேலை இல்லாத ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள்

சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி,ஆனி வரை நெல்லோ தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள் ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள்

அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும் ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.
அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில் கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள்.

கூழ் ஊற்றுவது உணவுப் பஞ்சத்தைப் போக்க மட்டுமல்ல, இது மிகப்பெரிய மருத்துவ முறையும்கூட ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.
கேழ்வரகு மற்றும் காம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது அதோடு காம்பை உண்பதால் உடலில் குளிச்சி ஏற்படும் என்பதால் இந்த சமயத்தில் கம்பு மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தினர்.

ஆடி மாதத்தில் ஏற்படும் பஞ்சத்திற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த முன்னோர்கள்,
திருமணம்,காதணிவிழா போன்ற சடங்குகளை செய்யமால் கடவுளை இந்த விஷயத்தில் முன் நிறுத்தி பஞ்சம் போகவும், பயிர் செழிக்கவும், தட்ப வெப்ப நிலை மாறி நோய்கள் தீரவும் மழை அவசியம் என்பதை மக்களிடம் கூறி கம்பு, கேழ்வரகு இருப்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் அம்மனுக்கு கூழ் ஊற்றும்படி செய்தனர்.
காலம் காலமாக பின்பற்றப்படும் நமது நம்பிக்கைகளையும் கலாச்சாரங்களையும் அதன் உண்மையான காரணங்களையும் தெரியாத காரணத்தால் ஆடிமாதம் கூழ் ஊற்றுவது மூடநம்பிக்கை என்பான் #திருட்டு_திமுக பகுத்தறிவாளன் அவனை வேப்பிலையால் 4 அடி அடித்து சாணி மெழுகி முகத்தில் 4 புள்ளி கோலம் போட்டு அனுப்பிவிட்டு
நம் முன்னோர்கள் வகுத்த பாதையை அந்த பிணைப்பு சங்கிலியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லி தமிழரின் பெருமையை நிலைநாட்டுவோம்

நாமும் ஆடி வெள்ளிக்கு கூழ் சமைத்து இல்லாதவர்களுக்கு கொடுத்து நாமும் அருந்தி நலமோடு வாழ்வோம்.

நன்றி வணக்கம் 🙏
#SSR

Special Thanks to நண்பன் @gopiyojivizi
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.