ஒருவர் எதாவது ஒரு சாதியில் பிறந்திருந்துதான் ஆக வேண்டும். ஆனால் அதை வைத்து ஒருவரை சாதி வெறியர் என சொல்லுவது ஆகச்சிறந்த முட்டாள்தனம். அவர் எந்த சாதியாக இருந்தாலும் சமூகத்தில் எப்படி வாழ்கிறார் எந்த மாதிரியான கருத்துக்களை எடுத்து வைக்கிறார் என்பதே முக்கியம் என நான் கருதுகிறேன்.
ஹேராம் படத்தில் "கும்பிடுறனுங்க ஆண்டே, தந்தி வந்திருக்கு கையெழுத்து போடனுமுங்க ஆண்டே" என்று ஒருவர் வீட்டு வாசலில் நிற்பார். அவரை கமல் உள்ளே வர சொல்லி அழைப்பார். அவரோ வராமல் தயக்கத்தோடு சுற்றி முற்றி பார்ப்பார். உடனே கமல் "அட வாயா அதான் மாமா இல்லைல", என்று உள்ளே கூப்பிடுவார்.
அவர் உள்ளே வந்து தந்தியை குடுத்துவிட்டுச் செல்வார். தீண்டாமையெல்லாம் தன்னோட முன்னோர்களோடு அழிந்து போகட்டும் என்பதே அந்த காட்சியின் கருத்து.
#மகாநதி படத்தில் காணாமல் போன தனது மகன் தெருவில் வித்தைகாட்டும் ஒருவரிடம் வளர்வதை கண்டுபிடித்துவிடுவார். தனது மகனை அழைத்துச்செல்லும் முன் அவர்களுக்கு நன்றி சொல்லிகொண்டிருப்பார்.
அப்போது "உங்களுக்கு ஹோட்டல்ல சாப்பாடு சொல்லிருக்கேன் சாப்பிட்டு போங்க நீங்க எல்லாம் எங்க வீட்ல சாப்டுவீங்களா?", என்பார் அவர். அதற்கு கமல் "என்னங்க பேசுறீங்க நீங்க, இரெண்டு வருசமா என் மகன் சாப்பிட்ட சாப்பாடு நான் சாப்பிட மாட்டேனா,? என கேட்பார்.
அவர்கள் சமைத்த சாப்பாட்டைதான் சாப்பிடுவார். "அப்போது கமலுடன் இருப்பவரையும் சாமி நீங்க சாப்பிடுறீங்களா என கேட்க, இல்ல இன்னைக்கி நான் ஒரு வேலை தான் என்பார். அப்போது கமல் அவரை நக்கலாக பார்த்து சிரிப்பார்.
அந்த சிரிப்புக்கு காரணம் "ஜெயிலில் இருக்கும்போது வார்டன் சாப்பாட்டை தட்டிவிட்ட போது தனக்கு அல்சர் சாப்பிடாமல் தன்னால் இருக்க முடியாது என கதறியவர் இப்போது இவர்களுடன் சேர்ந்து சாப்பிட மட்டும் இன்னைக்கி நான் ஒரு வேலை தான் என சொல்லி நலுவுகிறாரே" என்பதே.
#தீண்டாமை #சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும் என்பதே #கமல்ஹாசன் அவர்களின் நிலைப்பாடு.
கவுசல்யா சங்கர் வழக்கில் A1 குற்றவாளி விடுதலை செய்யப்பட்டபோது முற்போக்கு பார்ப்பானை நம்பாதே என்று கூவியவர்களே வாய் மூடிக் கிடந்தார்கள். அவர்களைத்தான் நம்பக்கூடாது.
-எழுத்து Nelsondas G
@CupidBuddha
கவுசல்யா சங்கர் வழக்கில் A1 குற்றவாளி விடுதலை செய்யப்பட்டபோது முற்போக்கு பார்ப்பானை நம்பாதே என்று கூவியவர்களே வாய் மூடிக் கிடந்தார்கள். அவர்களைத்தான் நம்பக்கூடாது.
-எழுத்து Nelsondas G
@CupidBuddha