தல பட தகவல்கள்
(17) முகவரி (தல#27)
நாம் இசையமைப்பாளரை வைத்து சண்டை போட்டு சாதாரணமாய் கடந்து செல்கிறோம்.
ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞன் இசையமைப்பாளராக எவ்வளவு கஷ்டபட வேண்டும், உழைக்க வேண்டும் என்று காட்டிய படம் முகவரி.
#Valimai
சிறு வயதில் தீபாவளிக்கு புத்தாடை அணியும் போது ஆடையின் வாசத்தில் பரவசம் வருமே அதே போல் இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது பரவசம் வரும்.
#Valimai
இந்த படத்துக்கு தலயை மன்னிக்கவும், ஸ்ரீதரை பிடிக்காதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை. தலயின் அழகு மட்டுமல்ல. ஸ்ரீதர் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அப்படி.
#Valimai
தல 21ம் நூற்றாண்டில் நடித்த முதல் படம்.
நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் VZ துரை தன் முதல் படமாக இயக்கி இருந்தார். துரைக்கு இது முதல் படம் மட்டுமல்ல, துரையின் மாஸ்டர் பீஸ் இந்த படமே.
#Valimai
மோட்டிவேசனுக்கு (Motivation) எம்பிஏ பாடத்திட்டத்தில் பக்கம் பக்கமாய் விளக்கம் கொடுத்திருப்பார்கள்.
மாஸ்டர் மகேந்திரனை வைத்து எடுக்கபட்ட ஒன்னரை நிமிட காட்சி தான் பலருக்கு மோட்டிவேசன்.
#Valimai
ஜோதிகா தலயின் காதலியாக தலயை நன்றாக ஊக்குவிப்பார்.
சிடி கடை ஓனராக வரும் மணிவண்ணன் பாத்திரம் காசெட்டில் பாட்டு கேட்டவர்களுக்கு தெரியும்.
தலயின் அண்ணணாக ரகுவரன் வழக்கம் போல் கலக்கல்
#Valimai
இசை மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதர் முன் வைக்கப்படும் முதல் கேள்வி இசையா? காதலா? அதை கடந்தபின் அடுத்த கேள்வி இசையா? குடும்பமா?
ஸ்ரீதர் எடுத்த முடிவென்ன இதுதான் கதை.
#Valimai
இசை பற்றிய படத்தில் பாடல்களை பற்றி சொல்லவா வேண்டும்.
தேவா வைரமுத்து கூட்டணி🔥🔥
நூற்றாண்டை வரவேற்கும் விதமாய் அமைந்த பாடல்
ஆண்டே நூற்றாண்டே...
புல்லாங்குழல் இசை கலைஞர் நவீன் பாடியது.
"நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் களைவாயா"
#Valimai
இசையை பற்றிய பாட்டான கீச்சு கிளியே ஹரிஹரன் குரலிலும் ஹரிணி குரலிலும் தனி தனியே உண்டு.
"இன்னிசை நின்று போனால் என் இதயம் நின்று போகும்".
"மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும் கீதம் கேட்டால் மீண்டும் துடிக்கும்"
#Valimai
ஜோதிகா தலயை ஊக்கப்படுத்தும் பாட்டு.
ஓ நெஞ்சே நெஞ்சே ...
ஹரிஹரன் சொர்ணலதா.
"சங்கீத ராஜாங்கத்தில் பட்டம் வெல்வாய்".
#Valimai
இயக்குநர் சொல்லும் காட்சிக்கு தகுந்த மெட்டு இருந்தும் ஸ்ரீதருக்கு வாய்ப்பு நிராகரிக்கபடும் போது வரும் பாட்டு.
ஏ நிலவே நிலவே உன்னிமேனன் பாடியது.
#Valimai
பூ விரிஞ்சாச்சு...
உன்னி கிருஷ்ணன் அனுராதா குரலில் வைரமுத்து ஸ்பெஷல் காதல் பாடல்.
"நான் மௌனங்களில் கவி படித்தேன்
நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய்
நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு நீ பறித்தாய்"
#Valimai
படத்தில் பாலகுமாரனின் வசனங்களும் ஷார்ப்.
"சம்பாதிக்கிறவன் மட்டும் ஆம்பள இல்லை. சாதிக்கிறவனும் ஆம்பள தான்".

"தோண்ட தோண்ட தான் தங்கம் கிடைக்கும்.
போராடினாதான் வெற்றி கிடைக்கும்"
#Valimai
ரகுவரன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது மருந்து வாங்க செல்லும் தலயிடம், ராஜீவ் காசு இருக்கா என கேட்டு காசு தரும் காட்சி.
முக்கால்வாசி நடுத்தர குடும்ப இளைஞர்கள் அனுபவித்திருக்கும் வலி.
#Valimai
தல ஒரு பேமிலி சப்ஜெக்ட்ல பிட்டாகி போன படம்.
இந்த படம் தலக்கு மிகவும் பிடித்த படம்.
#Valimai
தல குழந்தைகள் முன்னால் புல்லாங்குழல் வாசிக்கும் அறிமுக காட்சி ஆனந்தத்தை தரும்.
யாருமில்லா சாலையில் தனியாக நடந்து செல்லும் கடைசி காட்சி வலியை தரும்.
#Valimai
படக்குழு
பாடல்கள் வைரமுத்து
வசனம் பாலகுமாரன்
இசை தேவா
ஒளிப்பதிவு PC ஸ்ரீராம்
தயாரிப்பு நிக் ஆர்ட்ஸ்
இயக்கம் VZ துரை
#Valimai
தொகுப்பு
#மார்கழிபனி
You can follow @Subbiahselvaa7.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.