இந்த threadல எங்க( @padmapri n @VP3107)வாழ்க்கையில எங்க ஹீரோஸ் எப்படி ஒரு அங்கம் ஆனாங்க அப்படின்றத பார்க்க போறோம். God of cricket பற்றியும் God of cinema பற்றியும் தனியா நிறைய பார்ப்போம் அதுக்கு முன்னாடி இது இருவருக்குமான பொதுவான சிறு thread
என் வாழ்க்கை பத்தி சொல்றத விட என் தங்கச்சி வாழ்க்கையில முக்கிய திருப்பமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தான்.
எனக்கு எப்படி என் தலைவர்கள் ரெண்டு பேரும் Inspiration. அதே மாதிரி தான் என் தங்கச்சி எனக்கு ஒரு மிகப்பெரிய Inspiration
எனக்கு எப்படி என் தலைவர்கள் ரெண்டு பேரும் Inspiration. அதே மாதிரி தான் என் தங்கச்சி எனக்கு ஒரு மிகப்பெரிய Inspiration
2.4.2011 அன்றுதான் என் இரண்டு தலைவர்களும் முதல் தடவையா ஒரே இடத்தில் பார்க்க நேரிட்டது அதுவும் தொலைக்காட்சியில். எத்தனையோ பெரிய celebrities Finalsக்கு வந்து இருந்தாங்க. நான் கூட நினைச்சேன் தலைவர் பார்க்க வந்தா எப்படி இருக்கும் அப்படின்னு, பார்த்தா நெஜமாவே தலைவர் வந்துட்டார்.
இந்தியா உலகக் கோப்பையை ஜெயிச்சது தலைவர் கொடியசைத்து மகிழ்ந்தது மொத்த நாடும் சந்தோஷமாக கொண்டாடியது இதெல்லாம் சொல்ல வார்த்தை போதாது. ஆனால் அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. அடுத்த மாதமே தலைவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதேபோல் என் தங்கையின் உடல்நிலையும் அதே மாதத்தில் பாதித்தது.
அந்த மே மாசம் அவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் ஸ்கூல்ல இருந்தது திடீர்னு ஸ்கூல்ல இருந்து என் தங்கச்சிய ஆயாம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருந்தாங்க. அவளுக்கு மூச்சு வாங்கிக் கொண்டே இருந்தது அதனால் Principal கூட்டிட்டு போய் வீட்டில் விட சொன்னாங்கனு சொன்னாங்க.
முதலில் பக்கத்திலிருந்த clinic அழைச்சுட்டு போனோம் அங்க அவளுக்கு ஏதோ கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் என்று சொல்லி விட்டுட்டாங்க. அவளுக்கு மூச்சு வாங்கிக் கொண்டே இருந்தது. அதனால் நாங்கள் போரூர் ராமச்சந்திரா வில் சேர்த்தோம் அங்கும் நிறைய Test எடுத்துட்டு சைகைட்டரிஸ்ட் பாக்கணும்னு சொல்லிட்டாங்க
மூன்று நாள் ராமச்சந்திரா வில் treatment பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்தபின் நாங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டோம். அவளுக்கு அதே நிலை நீடித்தது அதனால் வேலூர் அழைச்சிட்டு போனோம். அங்க ஸ்ரீ புரத்தில் தங்க கோயில் ஆஸ்பிடல்ல சேர்த்தோம்.
அப்படி வேலூர் போகும்போதுதான் நாங்கள் போரூர் வழியாக சென்றோம் அப்போதுதான் தலைவரை ராமச்சந்திரா வில் சேர்த்து இருந்தனர். அப்போது காருக்குள் இருந்த நாங்கள், எங்கள் கண்களும் எண்ணமும் அந்த ஹாஸ்பிடல் நோக்கியே இருந்தது கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டே சென்றோம்.
வேலூர் சென்றதும் தலைவரை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற செய்தி எங்களுக்கு மிகுந்த கவலையை தந்தது. அதேப்போல் என் தங்கையை ஒரு வார காலம் ட்ரீட்மென்ட் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. அவள் அடிக்கடி மயக்கம் உற்றாள் எழுந்து நடந்தாள், சாப்பிட்டால், மயங்கி விடுவாள் பாத்ரூமில் கூட மயங்கி விடுவாள்
இதற்கு காரணம் அவளுக்கு Exam Fear, Teacher fear, Counselling அவசியம் என்று ரிப்போர்ட் தந்தனர். ஒரு வருடகாலம் வீட்டிலேயே தங்கினாள் அப்போது இந்தியா ஆடிய WC matches highlights, தலைவரின் படங்கள் மற்றும் தலைவரும் சிங்கப்பூரில் இருந்து வந்தது அவளுக்கு தெம்பு தந்தது.
ஒருவருட காலம் என் பெற்றோருக்கு மிகுந்த மன வேதனைதான் அவள் மூச்சை இழுத்து மயங்கி விடுவாள் அடிக்கடி சிறு அதிர்ச்சியும் அவளால் தாங்க நேராது. பின் அப்பாவின் நண்பர் துணையால் ஆண்டவனின் அருளாலும் கடலூரில் ஒரு சித்த வைத்தியரை சந்தித்தோம் அவரால்தான் இவள் குணமாக்க பட்டாள்
அவர் இவளது நாடியைப் பார்த்து நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டதை அறிந்தார் என் அம்மா கருவுற்றபோது மாமியார் கொடுமையால் சிசு ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறந்ததே இதற்கு காரணம். அந்த வைத்தியரின் உதவியாலும், யோகா தியானத்தின் உதவியாலும் நன்கு குணம் அடைந்தாள். ஆனால் அவள் பள்ளிக்கு செல்லவே இல்லை
தனித் தேர்வு முறையில் 12th exam எழுதினாள். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் Business Maths Subject absent ஆகவும் செய்தாள். அப்போது அவளுக்கு ஊக்கமளித்தது சச்சினும் 10th fail ஆனதுதான். சச்சின் fail ஆனாலும் கிரிக்கெட்டில் சாதித்தார். இதை அவள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூறுவாள்
ஒருநாள் நானும் சச்சினை போல் சாதிப்பேன் என்று கூறுவாள். அவ்வாறே அவள் சாதித்தும் விட்டாள். UG படிப்பில் Rank just miss. ஆனால் PG இல் RankHolder, medal பெற்று சாதித்தாள். அப்போது நானும் என் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சியும் எண்ணிலடங்காதது.
என் தங்கை உடல்நிலை சரியில்லாத காலத்தில் அவளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது, தலைவர் சிங்கப்பூரில் இருந்து மீண்டும் தெம்பாக திரும்பியது. அதேபோல் அவள் படிப்பில் தேர்ச்சி பெறாமல் இருந்தபோது இன்ஸ்பிரேஷனாக இருந்தது சச்சின் தான்.
அப்பாவோட கனவு என்ன காஸ்ட் ஆடிட்டர் பாக்குறது அப்புறம் என் தங்கையை நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் மன பலத்துடனும் பார்க்க வேண்டும் என்பது. அன்று அவளுக்கு கவுன்சிலிங் தேவைப்பட்டது இன்று அவளோ MSW முடித்துவிட்டு பலபேருக்கு கவுன்சிலிங் செய்கிறாள் மற்றும் HR ஆக பணிபுரிகிறாள்
சச்சினின் கனவு உலகக் கோப்பையை வென்றது மூலம் நிறைவேறிற்று. தலைவரின் கனவு தமிழக மக்களுக்கு நல்லாட்சி தருவது. அதுவும் விரைவில் ஆண்டவன் அருளால் நிறைவேறும். எங்களின் கனவு தலைவர் ஆட்சியைப் பார்த்து மகிழ்வது மற்றும் தலைவரையும் சச்சினையும் நேரில் ஒருமுறையேனும் சந்தித்து மகிழ வேண்டும்.
@RajiniFanArjun @SSR_Sivaraj @Rkarthi81 @rakks_twitz @parthispeaks @Arunk_2 @prsekar05 @rajini_mano @Vijayar50360173 @warnermani @Deepanrohit45 @RajiniforTN @shagul_kumar @VettaiyanTweets @prasannavsn93 @sjoruimsai @shagul_kumar @Vasheegaran @hunmid12 @EngineerKpn @Vrisha18