தெய்வம் என்றால் என்ன, எதற்காக தெய்வத்தை வழிபடுகிறோம், தெய்வத்தின் மூலம் அதிக பட்சமாக நமக்கு என்ன கிடைக்கும் - இவற்றுக்குப் பதில் தெரிந்தால் இந்த சர்ச்சைக்கு இடமேயில்லை.
"வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்"
கட்டுரையைப் படிக்கவும். http://jayasreesaranathan.blogspot.com/2017/03/vedic-concept-of-creation-and-moksha.html + https://twitter.com/JKalyanaraman/status/1280891090892058629
முக்தி பெற சிவனை வணங்கினால் என்ன, விஷ்ணுவை வணங்கினால் என்ன, இதில் என்ன பேதம் இருக்கிறது என்று எண்ணலாம். அப்படி அல்ல, இந்தக் கடவுளை வணங்கினால்தான் முக்தி, அந்தக் கடவுளை வணங்கினால் முக்தி கிடைக்காது என்றும் எண்ணலாம். + @ranganaathan @Gopalee67
இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். +
அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.எனவே பிரமாண நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
அவை கூறுவது என்னவென்றால், பரப் பிரம்மனையே தியானித்து வந்தால், அந்த பிரம்ம நிலையை ஒருவன் அடைவான். + @GopalanVs
பிரம்மம் என்பதற்கு எளிமையான விளக்கம் ‘சத்யம், ஞானம் அனந்தம் (எல்லை இல்லாதவன்)’ என்பதே. இந்த மூன்று குணங்களைக் கொண்டவனாக இறைவனை எந்நேரமும் நினைத்து வந்தால், முக்தி கிடைக்கும்.
இவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். பரப் பிரம்மனது ரூபம் என்ன? + @Padmaavathee
நான் சிவனை வாங்குகிறேன். அவனை பிரம்மமாக தியானித்தால், எனக்கு முக்தி கிடைக்காதா?
அல்லது ராமனை வணங்கும் நான் அவனைப் பிரம்மமாக நினைத்து தியானம் செய்தால் முக்தி கிடைக்காதா?
நாராயணனை மட்டுமே தியானம் செய்தால்தான் முக்தி கிடைக்குமா? + @VasaviNarayanan
அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா? மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் ஜோதிடத்தில் உள்ளது +
மும்மூர்த்திகள் மூலம் கிடைக்கும்முக்தியைக் காட்டும் ஜோதிட விவரங்களை இங்கே படிக்கவும்.
http://jayasreesaranathan.blogspot.com/2017/03/vedic-concept-of-creation-and-moksha.html
இனி அடிப்படை விவரத்துக்குவருவோம்
எந்தக் கடவுளைப் பரப் பிரம்மம் என்று வணங்குகிறோமோ,அந்தக் கடவுள் மீதே உடல், பொருள், ஆவி என்று அனைத்து செயல், எண்ணங்களைச் செலுத்த வேண்டும்+
கவனச் சிதறல் இல்லாமல், முழு முனைப்புடன், இரவு பகலாக தியானம் இருக்க வேண்டும். எனவே ஒரு கடவுளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவன், வேறு கடவுள் என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுளே முக்கியம், அவனே உயர்ந்தவன் என்றெல்லாம் சொல்லி கவனம் கொள்ள வைத்துக் கொள்ளும் பொருட்டு பெரியோர்+
கூறியிருக்கின்றனர்.
சிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்.+ @VisheshOff
நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக்கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, + @vikramb
தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை.
முக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.+ @BjpKalyaan
அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.
இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, + @sgurumurthy
ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல.
அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று+ @Indumakalktchi
எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது.
அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும்.+ @JKalyanaraman
அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே? + @_Satchitananda
எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது + @Shreeshankar15
என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.
முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது - ஜோதிட பாஷையில் சொல்வதானால் - பாவ கர்மாவை உண்டு பண்ணும். + @muthushiv
அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள்.+ @rangats
முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.
மேலும் விவரங்களுக்கு
http://jayasreesaranathan.blogspot.com/2017/03/vedic-concept-of-creation-and-moksha.html
"வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்"
@JKalyanaraman
'எதை நீ முழு கவனத்துடன் உபாசிக்கிறாயோ, அதுவாகவே நீ ஆகிறாய்' - என்பதே மூலக் கருத்து. இதை 'தத் க்ரது' என்கிறது பிரம்ம சூத்திரம். சர்வம் நாராயணம் , அல்லது சர்வம் சிவம் என்று தீவிர சிந்தையில் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே காரணம். இதை புரிந்து கொள்ள வேண்டியது இந்துவின் கடமை.ஏனெனில்+
ஆபிரகாமிய மதங்களில் இந்தக் கருத்து கிடையாது. அம்மதங்களில் தெய்வம் என்று போற்றப்படுபவர்கள்,முழு முதற் கடவுளான பிரம்மத்தை உபாசிக்காமையால், முக்தி அடைந்தவர் இலர். எனவே அவர்களுக்கு மறு பிறவி உண்டு. அதுவரை அவர்களை உபாசித்த உயிர்களும் அவர்களிடமே நிலைத்து,+
மீண்டும் பிறக்க வேண்டும். ஆத்மா என்பதையே ஏற்றுக் கொள்ளாத அந்த மதங்களைப் பின்பற்றினால் ஆத்ம ஞானம் எங்கிருந்து வரும்?
ஆத்மா என்ற ஒன்று இருப்பதையே ஒருவன் அறியவில்லை என்றால் ஆத்மாவுக்கு விடுதலை என்னும் முக்தியை ஒருவன் எப்படி அடைய முடியும்?
ஆத்ம ஞானமே வேத மதத்தின் உயரிய குறிக்கோள்.
You can follow @jayasartn.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.