விருமாண்டியும் பெண்ணியமும்:
நீங்கள் கவனித்திருப்பீர்களா, விருமாண்டியில் கதை பெண்களை வைத்தே நகரும். பெண்கள்தான் கதையின் நாயகர்களாக இருப்பார்கள்.
விருமாண்டி என்ற கதாப்பாத்திரத்தை செம்மைபடுத்தியிருப்பது அவர் வாழ்கையில் வரும் பெண்களாகவே இருப்பார்கள். @ikamalhaasan #விருமாண்டி
முதலில் "சுப்புத்தாய்", விருமாண்டியின் பாட்டி. அப்பா அம்மாவை இழந்த விருமாண்டிக்கு எல்லாமுமாய் இருப்பவர். முரடனாக இருந்தாலும் அப்பாவியாக இருக்கும் தனது பேரனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனது பேரனை நல்லழி படுத்த நினைப்பார்.
அடுத்தது "அன்னலச்சுமி". விருமாண்டியின் பாட்டி இறந்துபோனதும் மீண்டும் அப்பாவியாகவும் ஏமாளியுமாக இருப்பார் விருமாண்டி. அன்னலச்சுமி விருமாண்டியை உரிமையெடுத்து அதட்டி , நல்வழிபடுத்துவாள். விருமாண்டிக்கு தெளிவாய் சிந்திக்க கற்றுக்குடுப்பாள்.
மீண்டும் ஜெயிலில் அப்பாவியாக வெறும் கோவத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பார் விருமாண்டி. அப்போதுதான் அங்கே "ஏஞ்சலா காத்தமுத்து", என்ற கதாப்பாத்திரத்தின் உதவியால்தான் விருமாண்டி செய்யாத தவறுகளுக்காக தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்ற உண்மை வெளியே வரும்.
சுப்புத்தாய், அன்னலச்சுமி, ஏஞ்சலா காத்தமுத்து, இந்த மூன்று பெண் கதாப்பாத்திரங்களால்தான் விருமாண்டி கதையே நகர்ந்து செல்லும்.

பெண்கள் இல்லாமல் நமது வாழ்க்கை நகராது எதாவது ஒரு உருவத்தில் அம்மாவாகவோ பாட்டியாகவோ, சகோதரியாகவோ தோழியாஇவோ நம்மை வழிநடத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.
"விருமாண்டி" ஒரு ஆச்சரியமான படைப்பு. ஒரே படத்தில் எத்தனை விசயங்களை பேசியிருக்கிறார் கமல்ஹாசன். கதாநாயகன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்துமாய் இருந்து இப்படி ஒரு அற்புதமான படைப்பை நமக்காக தந்திருக்கிறார், இந்திய சினிமாவிற்காக தந்திருக்கிறார்.
"நூறு புத்தகங்கள் படித்தால் நீ ஒரு புத்தகம் எழுதிவிடலாம்", என்று ஒரு வாக்கியமுண்டு.
#விருமாண்டி என்ற ஒரு படத்தை வைத்தே நூறு படங்கள் எடுத்துவிடலாம்.

-எழுத்து Nelsondas G
@ikamalhaasan @CupidBuddha @krishdreamz #KamalHaasan #கமல்ஹாசன்
You can follow @NelsondasG.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.