நாளை முதல் சென்னையில் தளர்வுகள். ஆனால் நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
1. முக கவசம் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்
2. முக கவசம் மூக்கையும், வாயையும் முழுமையாக மூடியபடி அணியவும் #covidchennai 1/n
3. நீங்கள் நுழையும் கடைகளில் முக கவசம் இல்லாமல் யாரேனும் இருந்தால் அவர்களை அணிய சொல்லுங்கள். மறுத்தால் அந்த கடையிலிருந்து உடனே சென்று விடுங்கள். கடைக்காரர்கள் முக கவசம் அணியவில்லை என்றல் அங்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள். 2/n
4.பில்லிங் இடத்தில கூட்டம் போடாதீர்கள். ஒருவரின் பின் ஒருவர் சமூக இடைவெளி விட்டு நில்லுங்கள்.
5. எவருடனும் கை குலுக்குவதை தவிருங்கள்.
6. முக கவசம் அணிய சொல்வதற்கோ , சமூக இடைவெளி பின்பற்ற சொல்வதற்கோ கூச்சப்படாதீர்கள். 3/n
உங்கள் நண்பனாக இருந்தாலும், உறவினரும் ஆக இருந்தாலும் சரி, சங்கோஜப்பட வேண்டாம்.
7.கைப்பையிலோ , வண்டியிலோ sanitizer பாட்டில் வைத்து அடிக்கடி கைகளை சுத்தபடித்திக்கொள்ளுங்கள்.
8.தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள்
4/n
9. வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் துணிகளை அகற்றி தலை உட்பட முழுமையாக குளியுங்கள்.
10. கழற்றிய துணிகளை மறு நாள் காலை வரை தொடாதீர்கள்.
11. முதியோர்கள் வீட்டில் இருந்தால், வெளியே செல்பவர்கள் அவர்களுடன் நெருக்கமாக பழகுவதை சில வாரங்களுக்கு தவிர்த்துவிடுங்கள். 5/n
12.எவரேனும் இதை எல்லாம் நீங்கள் செய்வதற்கு உங்களை கிண்டல் செய்தல் அதை பொருட்படுத்தாதீர்கள்.
நம் சென்னையை கொரோனா நோய் தாக்கத்திலிருந்து காப்பது நம் கடமை. ஒத்துழைப்போம் அரசுடன். முறியடிப்போம் கொரோனவை. #covid #covidchennai 6/6
You can follow @sumanthraman.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.