Office love : புதுசா வேலைல ஜாய்ன்ட் பண்ண பொண்ணு அப்பப்போ என்னோட கேபின் பக்கம் வந்துட்டு போகும் அதோட வேலை விசயமா வரும்போது போகும்போதெல்லாம் ஒரு லுக்கு விட்டுட்டே போகும், லஞ்ச் டைம்ல ஒரு டேபிள் தள்ளிதான் உக்காந்து சாப்புடும் அப்பவும் லைட்டா ஒரு லுக்கு விடும்
ஒரு ரெண்டு மூனு மாசம் இப்பிடியே போய்ட்டு இருந்துச்சு ஒரு நாள் வேலைல டவுட்டுனு ஏங்கிட்ட வந்து கேட்டுச்சு நான் அந்தப்பொண்ணு டேபிளுக்கு போய் சொல்லி தந்தேன் கெளம்பும்போது எப்பவுமே இப்பிடித்தான் இருப்பீங்களா உர்ர்ருனு அப்படீனு கேட்டுச்சு,
ஏன்னு கேட்டதுக்கு பேசவே காசு கேப்பீங்க போலன்னுச்சு அப்பிடியெல்லாம் இல்லன்னேன் இல்ல நீங்க சிரிச்சே நான் பாத்ததில்ல அதான் கேட்டேன்னுச்சு காரணம் இருந்தா சிரிப்பேன்னேன் தெரியாம கேட்டுட்டேன் ஹெல்ப் பண்ணதுக்கு தாங்ஸ்னுச்சு வந்துட்டேன் .
ஒருநாள் சன்டே அன்னைக்கு காலைல வாட்சப்ல Hi nu ஒரு Msg வந்துச்சு யார்னு கேட்டதுக்கு நான்தான் திவ்யா இதான் என் நம்பர்னுச்சு ஓகேனு ரிப்ளை பண்ணேன் அப்பறம் மதியம் சாப்டீங்களானு Msg, சாப்ட்டேன்னேன்
என்ன பண்றீங்க உங்க சொந்த ஊர் படிப்புனு சிலபல கேள்விகள் கேட்டுச்சு
என்ன பண்றீங்க உங்க சொந்த ஊர் படிப்புனு சிலபல கேள்விகள் கேட்டுச்சு
அப்பறம் ஆஃபிஸ் முடிஞ்சு போனப்பறம் நைட்டு ஆனா குட் நைட் வரும்.நான் குட் நைட்னு அனுப்புவேன் கோவ ஸ்மைலி அனுப்பும் ஆரம்பத்துல இருந்தே ஓரளவு தெரிஞ்சிருச்சு நம்ம மேல ஒரு க்ரஷ் இந்த பொண்ணுக்குனு அப்பறம் அடிக்கடி Msg பண்ணது பேசுனத வச்சு கன்ஃபார்ம் ஆயிருச்சு
ஏன் உங்க வாட்சப் போட்டோ ஸ்டேட்டஸ் எதுவும் தெரியலனு கேட்டுச்சு, நம்பர் Save பண்ணாதான் தெரியும்னேன்
நீங்க ரொம்ப பண்றீங்கனு ரிப்ளை பண்ணுச்சு நான் பிடிகுடுக்காமயேதான் ஒன் வேர்டுல ரிப்ளை பண்ணிட்டு வந்தேன் நாமளா எதும் பேசி ஆசைய வளத்து விட வேணாம்னு
நீங்க ரொம்ப பண்றீங்கனு ரிப்ளை பண்ணுச்சு நான் பிடிகுடுக்காமயேதான் ஒன் வேர்டுல ரிப்ளை பண்ணிட்டு வந்தேன் நாமளா எதும் பேசி ஆசைய வளத்து விட வேணாம்னு
எனக்கு ஒரே குழப்பம் இத எப்பிடி டீல் பண்றது, தட்டி கழிக்கிறதுனு, ஒரு வாரம் பேசாம இருக்கும் அப்பறம் திரும்ப Msg பண்ணும், ஆனா ஆஃபிஸ்ல கண்டுக்காத மாதிரியே இருக்கும் நான் லீவுனா போன் பண்ணி ஏன் வரலனு கேக்கும் எனக்கு பட்டுனு Msg பண்ணாதனு சொல்ல வேற தயக்கம்
ஏன்னா அந்தப்பொண்ணு அதுவரைக்கும் எதுவும் சொல்லல நாம ஏதாச்சும் சொல்லி நான் Friendly யாதான் பேசுனேன்னு சொல்லிட்டா நமக்கு மொக்கை ஆயிருமேனு ஆனா நான் Accept பண்ற சூழ்நிலைல வேற இல்ல ஏன்னா நான் வேற ஒரு பொண்ண வெரட்டிட்டு இருக்கேன்
அந்தப்பொண்ண ஒரு வருசமா ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருக்கேன் Friendly ah வாட்சப்ல பேசும் டிபி வச்சா ஆஹா ஓஹோனு ஜொள்ளு ஊத்துறதுனு அந்தப்பக்கம் வண்டி ஓட்டீட்டு இருக்கேன் ஆனா அந்தப்பொண்ணு சுத்தமா என்ன மதிக்காது/ கண்டுக்காது. ஆனா அப்பப்போ பேசும்
அந்தப்பொண்ண இம்ப்ரஸ் பண்ண ஸ்டேட்டஸ் வைக்கிறது சோகமா டீபி வைக்கிறதுனு எல்லா குரலி வித்தையும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் ப்ரப்போஸ் பண்ணா என்னாகும்னு தெரியல ஆனா ஒத்துகிட்டா மேரேஜ் பண்ணலாம்ற ஆசை
அந்தப்பொண்ணு வேற கம்பெனி அடிக்கடி ஆஃபிஸ் முடியிற டைம் வரை மணிக்கணக்கா கம்பெனி வாசல்ல நிக்கிறது கூடவே வீட்டு வரைக்கும் போறதுனு போய்ட்டு இருக்கு ஏன் ஆஃபிஸ்லாம் வர்றீங்க வராதீங்கனு சொல்லும் உங்கள பாக்கனும் போல இருந்துச்சு அதான் வந்தேன்னுவேன்
ஏன் பாக்கனும்னு கேக்கும் அழகா இருக்கீங்கள்ல அதான்னு சொன்னா நிஜமாவானு கேக்கும் அத வச்சு அன்னைக்கு நைட்டு முழுக்க சேட்டிங்/ ஜொள்ளு போகும் அப்பறம் கவிதை சொல்றது அந்தப்பொண்ணு யாருக்குனு கேக்க உங்களுக்குதானு சொல்ல அது போட்டோ அனுப்புனா எடிட் பண்ணி கவிதையோட அனுப்ப
இப்பிடி போய்ட்டு இருக்குற நேரத்துலதான் First சொன்னனே என் ஆஃபிஸ்ல ஒர்க் பண்ற பொண்ணு அந்தப்பொண்ணு எனக்கு Msg அனுப்பிட்டு இருந்தது அதனாலதான் அந்தப்பொண்ண கண்டுக்காம அவாய்ட் பண்ணது
திவ்யா பேசிட்டு இருக்கும்போது ஒரு நாள் நீங்க என்ன ஜாதினு ஓப்பனாவே கேட்டுச்சு Msg la, இனிமே என்கிட்ட பேசாதேனு சொல்லி ரிப்ளை பண்ணிட்டேன் இல்ல நான் வேற ஒரு விசயமா கேட்டேன் அது இதுனு சமாளிச்சிச்சு சரி இனிமேல் பேசாதனு கோவமா சொல்லிட்டேன் அப்பறம் ரொம்ப நாள் பேசாது
நானும் கண்டுக்கல இந்தப்பொண்ணு கூட கடல போட ஆஃபிஸ் போய் பாக்கனு போச்சு ஒரு நாள் நீங்க யாரையும் லவ் பண்றீங்களானு கேட்டுச்சு இதான் சான்ஸ் இதுக்கு மேல வெய்ட் பண்ணகூடாது ஆமானு சொன்னேன் யாரனு கேட்டுச்சு உன்னதான்னு சொல்லிட்டேன் பொய் சொல்லாதீங்கனுச்சு
இதுல எதுக்கு பொய் சொல்லனும் சத்தியமா உன்னதான் லவ் பண்றேன்னேன்
Iam very Sorry எனக்கு அந்த தாட் இல்லேன்ருச்சு Its okay nu சொல்லிட்டேன் அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு என்ன Msg யே காணாம்னு கேட்டுச்சு நம்மதான் கேட்டா போதுமே திரும்ப சேட்டிங்
Iam very Sorry எனக்கு அந்த தாட் இல்லேன்ருச்சு Its okay nu சொல்லிட்டேன் அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு என்ன Msg யே காணாம்னு கேட்டுச்சு நம்மதான் கேட்டா போதுமே திரும்ப சேட்டிங்
எங்க வீட்ல ஏற்கனவே ரெண்டு வருசமா பொண்ணு பாக்கவா இல்ல யாரையும் லவ் பண்ணா சொல்லுனு கேட்டப்ப வெய்ட் பண்ணுங்கனு சொல்லி வச்சிருந்தேன் ரொம்ப நாள் டார்ச்சர்க்கு அப்பறம் நான் சரினு சொல்லி பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டானுக இந்தப்பொண்ணுட்ட விசயத்த திரும்ப சொல்லி