த்ரட்: "Life story"
"osita iheme""ஒசிட்ட ஐஹூம்"
Feb20 ,1982 வயது 38.
நைஜீரியன்.
நம்ம ஊர் வடிவேல் மாதிரி மீம் மெட்டீரியலாக இப்பொழுது வலம் வருகிறார். மதம் மொழி இனம் கடந்து தனது உடல் மொழிகளால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இவருக்கு பிறவியிலேயே உடல் வளர்ச்சியில் பாதிப்பு இருந்தது.
உடலில் தான் குறை ஆனால் மனதளவில் மிகவும் உற்சாகமானவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீதும் சினிமாவின் மீதும் காதல் இருந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் படிப்பு சினிமா சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டுமென்று முடிவு எடுத்து மாஸ் கம்யூனிகேஷன் படித்து முடித்தார். பிறகு சினிமாவில்
வாய்ப்புத் தேடி அலைந்த ஒசிட்டா வுக்கு முதலில் சிறுவன் வேடம் தான் கிடைத்தது.2003ஆம் ஆண்டு வெளியான"Aki na Ukwa"இப்படத்தில் சிறுவனாக நடித்தார். ஒரு 18வயது இளைஞன் சிறுவனாக நடிப்பது அவ்வளவு எளிதல்ல. உடலளவில் வளர்ச்சி இல்லாவிட்டாலும் மனதளவிலும் மகிழ்ச்சியிலும் வளர்ச்சி அடைந்த இருந்தார்
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடித்தார். அதற்கு அடுத்து ஒரு படம் நடித்தார்..இந்த இரண்டு படங்களும் நடித்து முடித்த அடுத்த ஆண்டு அவருக்கு 18 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரைபோலவே உடல் வளர்ச்சி குன்றிய ஒருவருடன் சேர்ந்து 2003இல் நடித்த படம்தான்.
*aki na ukwa*. இந்தப்படம் நைஜீரியாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்று நாம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கலாக காணும் பெரும்பாலான போட்டோக்களும் வீடியோக்களும் இந்த படத்திலிருந்துதான். இந்த படத்தில் ஒஸிட்டா வின் பெயர் பாவ் பாவ் இவரின் உண்மையான பெயர் தெரியாதவர்கள் இவரை பாவ் பாவ்
என்று அழைப்பார்கள்.இவரின் உருவம அமைப்பால் இவருக்கு தொடர்ந்து சிறுவன் மற்றும் நகைச்சுவை வேடமே கிடைத்தது. ஓய்ந்துவிடவில்லை மனச்சோர்வு அடைந்து விடவில்லை. தன்னால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க முடியுமென்று குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தினார்.
சீரியஸான வேடங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்து ஆப்பிரிக்காவின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் "ஆப்பிரிக்கன் மூவி அகாடமி" சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. தற்போது இவர் நைஜீரியாவின் மோஸ்ட் வான்டட் நடிகர்களில் ஒருவர்.
இவருக்கு 2011ஆம் ஆண்டு நைஜீரியாவின் உயரிய விருதான "நேஷனல் அவார்டு" வழங்கப்பட்டது. இந்த விருது எல்லா கலைஞர்களுக்கும் கிடைத்துவிடாது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் விருது. 2014 ஆம் ஆண்டு "ஆப்பிரிக்கா மேஜிக் வியூவர் சாய்ஸ்" விருது
இவருக்கு வழங்கப்பட்டது. 150 படத்திற்கும் மேலான படங்களில் நடித்திருக்கிறார். சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட ஆசை பட்ட ஓசிட்டா சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆடம்பர வீட்டை கட்டினார். சொகுசு கார் ,வசதி அனைத்தும் இவருக்கு கிடைத்தது.
இவரைப் போலவே சிறு வயதில் பல இன்னல்களுக்கு உள்ளான பல இளைஞர்கள் மற்றும் கருப்பின மக்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கினார். அதுதான்"இன்ஸ்பயர்டு மோமன்ட் ஆப்பிரிக்கா"இதனை நைஜீரியா இளைஞர்களுக்கும் கருப்பினத்தவர் களுக்கும் வழிகாட்டும் அமைப்பாக உருவாக்கினார்.
ஒசிட்டாவின் வளர்ச்சி சாதாரணமாகவும் அவ்வளவு எளிதாகவும் அல்ல. அவர் எதிர்கொண்ட சவால்களும் இன்னல்களும் அவமானங்களும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகம். இவர் மனதளவில் துவண்டுவிடும் போது அதிலிருந்து மீண்டுவர புத்தகங்களை தான் அதிகம் விரும்பிப் படித்தார்.
அவர் விரும்பிப்படித்த புத்தகம் "திம்கா அக்குவே" வின் புத்தகங்கள் தான். அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்கள்போலவே அவரும் ஒரு புத்தகத்தை எழுத முடிவு செய்தார். இதற்காக முழுமையாக 2 ஆண்டுகள் செலவழித்து இளைஞர்களுக்காக குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக ஊக்கம் கொடுக்கும் வகையில்.
"inspired 101"என்ற புத்தகத்தை தனது சொந்த பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.மாற்றத்தை மாணவர்கள் மத்தியில் இருந்து துவங்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார் ஒசிட்டா.இதனால் தனது சொந்த ஊரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கிடையே புத்தகங்களைக் கொடுத்து வினாடிவினா நடத்தி பரிசு தொகையும்
வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனது நண்பருடன் சேர்ந்து கதாபாத்திரங்களின் பெயரான "அக்கி அண்ட் பாவ் பாவ்" பெயரில் அறக்கட்டளை நடத்தி மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். ஒசிட்டா தனக்கு நடிப்பையும் தாண்டி மக்களுக்கு ஏதாவது உதவி செய்துகொண்டேஇருக்க வேண்டும்என்கின்ற எண்ணம்
இருந்துகொண்டே இருக்குமாம். நைஜீரியா அனைத்து துறைகளிலும் அங்கீகாரம் பெற வேண்டும் அதற்காக கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன் என்று பல நிகழ்ச்சிகளில் இவர் சொல்லியிருக்கிறாராம்.

இவர் மேலும் பல உயரங்களை தொடுவார். 💪👍 நன்றி 🙏
You can follow @balamurugan_sam.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.