அரசியல் ஆகட்டும் அல்லது சினிமாவாக இருக்கட்டும் நம்மவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ஆயிரம் அர்த்தம் பொதிந்து இருக்கும். அவற்றுள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில் நம்மவர் வைத்துள்ள திரைக்கதை ஆழத்தை அறிவோம். திரைக்கதை என்பது காட்சிகளின் தகவல்கள் ஆகும் (1/8)
சிறந்த திரைக்கதை , காட்சியின் தரத்தை உயர்த்தும். அந்த விதத்தில் திரைக்கதை எழுதுவதில் நம்மவர் வித்வான் ஆயிற்றே..
விஸ்வரூப சண்டை காட்சிக்கு முன் நம்மவர் ஒரு மேல் சுவற்றில் பதிக்கப்பட்ட ஒரு குழாயில் சிறு ஓட்டை இருப்பது போலவும் அதில் இருந்து தண்ணீர் சொட்டுவதை போலவும்.. (2/8)
விஸ்வரூப சண்டை காட்சிக்கு முன் நம்மவர் ஒரு மேல் சுவற்றில் பதிக்கப்பட்ட ஒரு குழாயில் சிறு ஓட்டை இருப்பது போலவும் அதில் இருந்து தண்ணீர் சொட்டுவதை போலவும்.. (2/8)
காட்சிகளை வைத்திருப்பார்..இதன் உண்மையான தாத்பரியம் யாது?? அவசியமும் யாது..?? நீங்கள் இதை சற்று கூர்ந்து பார்த்தால் உண்மை விளங்கும் . அது உங்களுக்கு Dynamic Time Indication என்னும் சொல்லை அறிமுகப்படுத்தும். இதன் அர்த்தம் யாதெனில், (3/8)
ஒரு குறிப்பிட்ட காட்சியை காட்டும் போது அந்த காட்சி நடைபெற்ற கால நேரம் எவ்வளவு என்பதை காட்ட எழுதப்படும் திரைக்கதை யுக்தி தான் Dynamic Time Indication . இதை நாம் அனைத்து இடத்திலும் பயன்படுத்த முடியாது. நேரம் என்பது காட்டப்பட வேண்டிய அவசியம் உள்ள இடத்தில் மட்டுமே (4/8)
இது சிறப்பை தரும். ஒரு சாதாரண கடிகாரத்தின் நேரத்தை அந்த காட்சியின் முன்னும் பின்னும் காட்டலாம்..ஆனால் அது அந்த காட்சியின் சுவாரசத்தை குறைத்து விடும். இதனால் தான் அந்த காட்சியோடு தொடர்புடைய ஒரு பொருளை வைத்து அந்த காட்சி நடைபெற்ற நேரத்தை Audience க்கு (5/8)
மறைமுகமாக சொல்வதே Dynamic Time Indication. இந்த படங்களை பாருங்கள். முதல் தண்ணீர் சொட்டுக்கும் இரண்டாம் தண்ணீர் சொட்டுக்கும் உள்ள நேர இடைவேளை "ஒரு நிமிடம்".
இப்போது விஸ்வரூப சண்டை அதாவது நமாஸ் செய்ய தொடங்கும் போது ஒரு தண்ணீர் சொட்டு விழும். சண்டை முடியும் (6/8)
இப்போது விஸ்வரூப சண்டை அதாவது நமாஸ் செய்ய தொடங்கும் போது ஒரு தண்ணீர் சொட்டு விழும். சண்டை முடியும் (6/8)
போது ஓரூ தண்ணீர் சொட்டு விழும். அந்த இடைவெளியும் "ஒரு நிமிடம்" தான். இதன் மூலம் அந்த விஸ்வரூப தரிசனம் ஒரு நிமிடத்திற்குள் நடந்து முடிந்தது என்பதை கமல் அவர்கள் நமக்கு மறைமுகமாக சொல்கிறார்.
Slow Motion லிலும் இதை சரியாக வைத்திருப்பார். (7/8)
Slow Motion லிலும் இதை சரியாக வைத்திருப்பார். (7/8)