இந்தியாவில் சமஸ்க்ருத மொழியில் ஏராளமான நூல்கள் இருந்தன. எல்லா நூல்களிலும், வேதத்தைப் பற்றி புகழ்ந்து ஒரு குறிப்பாவது இருந்தது. யாரைக் கேட்டாலும், எந்த சமஸ்க்ருத நூலைப் படித்தாலும் வேதமே ஆதியானது என்று சொன்னர்கள். இது முல்லரின் கவனத்தைக் கவர்ந்தது. + https://twitter.com/jayasartn/status/1276027924160774144
வேதம் என்பது ஆதி என்றால் அதில்தான் இந்திய வரலாற்றின் மூலம் இருக்க வேண்டும் என்று முன்னுரையில் வாதிட்டுள்ளார்.

இப்படி நினைத்தற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவர் பின் பற்றிய கிறிஸ்து மதத்தில் அவர்கள் மத நூலான பைபிளை முன்னிட்டே வரலாற்றை ஆராய்ந்தனர். +
கி-பி- 1654 – ஆம் ஆண்டு, ஐயர்லாந்தைச் சார்ந்த உஷர் என்னும் ஆர்ச்பிஷப் அவர்கள் பைபிளில் உள்ள விவரங்கள் அடிப்டையில் கி-மு. 4004 –ஆம் ஆண்டு அக்டோபர் 23 –ஆம் தேதி காலை 9 மணியளவில் இந்த உலகம் தோன்றியது என்று கூறியுள்ளார். அதனால் +
அது முதற்கொண்டே உலகமும், மக்களும் இருந்திருக்கின்றனர் என்பதே அவர்கள் கோட்பாடு.
கி-மு- 4004 ஆம் ஆண்டு உலகம் தோன்றியிருந்தால், அதற்குப் பின் வந்த பைபிள் கூறும் பெரு வெள்ளம், கி- மு- 2448 ஆம் ஆண்டில் வந்திருக்க வேண்டும். பிறகு வெள்ள நீர் வற்றி மக்கள் வாழ்க்கையைத் தொடங்கி, அதன்பின்+
ஆங்காங்கு குடி பெயர, அடுத்த 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்தக் கணக்கின் அடிப்படையில் கி-மு- 1500 –இல் ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். இதுவே முல்லர் போன்றவர்களது கருத்து. இவர்கள் இந்திய நூல்களைப் படிக்கவில்லை. இந்தப் பிரபஞ்சம் தோன்றின வரலாற்றைச் சொல்கின்றன நமது நூல்கள். +
அவை சொல்லும் காலக் கணக்கை அறிவியல் ஆமோதிக்கிறது. இதையெல்லாம் அறியாத காலத்தில், முல்லர் புகுத்திய குழப்பத்துக்கு ஆதரவு தரும் திராவிட அறிவிலிகளிடத்தில் இன்னும் நாம் பலி கடா ஆகிக் கொண்டிருக்கிறோம்.
படிக்கவும்:
http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/24.html 
@Padmaavathee @GopalanVs
You can follow @jayasartn.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.