ட்விட்டரில் பெரும்பாலும் ஒரே அமைப்பு/கருத்து சார்ந்தவர்களே பாலோவ் செய்கிறோம். மாற்று கருத்து உடையவர்கள் பாலோவ் செய்வது வெகு குறைவு. இந்த நிலையில், இங்கே 'ரஜினி அபிமானிக'ளுக்குள்ளயே follow செய்வதை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் பற்றிய த்ரெட் இது (1/7)
நாம் அரசியல் பழக வேண்டிய, தெளிவான அரசியல் பேச வேண்டியது அவசியம்.

அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்
"ரஜினி ரசிகர்களுக்கு சினிமா, FDFS தாண்டி ஒன்றும் தெரியாது" என்ற பிம்பத்தை உடைக்க வேண்டியது அவசியம்.

தங்களை விட ஆகச்சிறந்த சித்தாந்தவாதிகள் இல்லை என்ற மாய (2/7)
பிம்பத்துடன் உலவும் திக & திமுகவினரின் கருத்துகளுக்கு மாற்றாக, அவர்களுக்கு சரிசமமாக நாமும் அரசியல் பேச வேண்டும்.

'இது விசிலடிக்க தெரிந்த கூட்டம் மட்டுமல்ல, சமூக & அரசியல் விழிப்புணர்வும் கொண்ட கூட்டம்" என்பதை ஆணித்தரமாக நிலைநிறுத்த வேண்டியது நம் கடமை. மேம்போக்கான மீம்ஸ், (3/7)
ட்ரோல் தாண்டிய ஆழமான அரசியல் புரிதல் வேண்டும். நம் நட்பு, உறவு, பொது விவாத வட்டங்களில் அந்த புரிதலை வெளிப்படுத்தும்போதுதான் நடுநிலையாளர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும்.

அதற்கு இங்கு ட்விட்டரில் நம்மிடையே உள்ள பலர் தரும் அரசியல் பார்வைகள், தகவல்களை உள்வாங்குவோம். சில (4/7)
உதாரணங்கள் (உதாரணம் என்பதால் சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன்) -

@234seconds youtube சேனலில் வரும் அரசியல் விவாதங்கள்

@EngineerKpn கணிப்புகளில் தரும் கடந்த கால தகவல்கள்

@SSR_Sivaraj அரசியல் பதிவுகளின் ஆழமான செய்திகள்

@Tamil_humanist @vaisu_tweets @Usilaikaruvayan இவர்கள் (5/7)
பதிவுகளில் உள்ள அரசியல் ஆதாரங்கள்

@winsmech @vikkytwitz இவர்கள் தங்கள் விவாதங்களில் கொண்டுவரும் புள்ளிவிவரங்கள் + கருத்துகள்

இப்படி இன்னும் நம்மில் பலர் பகிரும் அரசியல் விஷயங்களை உள்வாங்குவதில் நமது சோஷியல் மீடியா நேரத்தில் 25% செலவிடுவோம்.

தலைவர் சொன்ன "சுழல் அலையாக" (6/7)
மாறுவதில் நமது இந்த மாற்றமும் செயல்பாடும் மிக முக்கியம்.

களத்தில் RMM உறுப்பினர்கள் தீவிர களப்பணி செய்கிறார்கள். நாம் ஆன்லைனில் தீவிர கருத்துப்பணி செய்வோம்.

🙏🤘🤘

(7/7)
You can follow @tn2point0.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.