என்னை மாற்றிய சோசியல் மீடியா இல்லா 21 தினங்கள்.

#21DaysWithoutSocialMedia

ஊரடங்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆரம்பித்து இனிமையாக இருந்தது வாழ்க்கை. 7 வருட காலத்திற்கு பிறகு வீட்டில் நீண்டநாட்கள் தங்க நேர்ந்தது கூடுதல் மகிழ்வை தந்தது. நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்கி இப்படியே சென்றது
ஆனால் நாட்கள் செல்ல செல்ல வேலை பளு அதிகமாக இருப்பதை உணர தொடங்கினேன். அதிகமாக வெளியில் செல்லாமல், நடக்காமல், நொறுக்கு தீனி உண்டு உடல் பெரிதாக தொடங்கியது.

கவனிக்க ஆள் இல்லாமல் சோசியல் மீடியாவில் பல மணி நேரங்களை செலவு செய்ய தொடங்கினேன். அது எனக்கு நல்ல நண்பர்களை தந்தாலும், கூடவே
என்னுடைய அலுவல் பணிகளின் செயல் திறனை (productivity)யை குறைத்தது. சொந்தமாக போன் இல்லாததால் எனக்கு வழங்க பட்ட அலுவலக தொலைபேசி யில் தான் அலுவலக உரையாடல்கலும், சொந்த பயன்பாடும். 90% mobile ஸ்கிரீன் active ஆக தான் இருக்கும்.

ஒரு கட்டத்தில் அலுவல் பணிகள் எல்லை மீறி என்னை நெருக்க
Salary changes, bonus இல்லை என அறிவித்தது, இந்த வருடம் appraisal , பதவி உயர்வு, hike எதும் இல்லை என்று அறிவிப்பு வர, layoff பயம் வேறு என என்னை அறியாமல் ஒரு தனிமை மனநிலைக்கு தள்ள பட்டென். இப்படியே விட்டால் அது மன அழுத்தில் தள்ளிவிடும் என்பதால் என்னை மாற்றி கொள்ள சரியான சந்தர்ப்பமா
இதனை கண்டேன். ஆதார பிரச்சினை என்ன என்று தெரிந்தால் அதற்கு தீர்வை கண்டுபிடிப்பது எளிது. Root Cause Analysis என்று எங்கள் துறையில் சொல்வார்கள். முதலில் என் மொபைல் போன் பயன்பாட்டை ஒரு வாரம்track செய்ய தொடங்கினேன். அங்கேயே பிரச்சனை தெரிந்து விட்டது. ஒரு வார avg usage என் மூஞ்சியில்
சாணியை கரைத்து ஊற்றி, செருப்பை கவ்வ குடுத்து அடித்தது. செல் பயன்படுத்தி கை மற்றும் தோள்வலி கூடவே வந்தது (frozen shoulder).

கீழே இருப்பது அப்போது எடுத்த chart.

சராசரி: ஒரு நாளைக்கு 12.30 மணி நேரம் பயன்படுத்தி இருக்கிறேன்
இதில் 30% வேலைக்கு என்று வைத்தால் கூட ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் waste.

அப்போது கூடவே அலுவல் பணிசுமைகள் கூடியதால் சோஷியல் மீடியாவில் இருந்த விலக முடிவு செய்தேன்.

Step 1:
அதற்கு ஆயத்தமாக எல்லா சோஷியல் மீடியா apps களையும் ரிமூவ் bசெய்தேன். டெலிகிராம் உட்பட
Step 2: பிரவுசரில் சென்று எல்லா site களையும் லாக் அவுட் செய்தேன். எனக்கு எதற்கும் பாஸ்வேர்டு நினைவில்லை. அதனால் திரும்ப forget password குடுக்கும் வரை பிரச்சனை இல்லை.

காலை மொபைலில் அலாரம் அடித்ததும் நம் கை அதனை நிறுத்தி விட்டு போன் நோண்ட ஆரம்பிக்கும். நான் எப்போதும் ஃபர்ஸ்ட்
twitter செல்வேன். ஆனால் அது அப்படியே இன்ஸ்டா, telgram என்று இழுத்து ஒரு மணி நேரத்தை உண்ண வல்லது.

எப்படியோ விரதம் தொடங்கி விட்டது. அப்போது நான் பட்ட பாடுகள் ஏராளம்.

இல்லாத டிவிட்டர்ரை கை தேடும். டிவிட்டர்.com என்று type செய்து ஓபன் ஆன உடனே தான் உரைக்கும். password தெரியாததால்
close செய்து விடுவேன்.

Step 3: ஒரு வெற்றிடம் ஏற்பட்டால் அதை வேறு ஒரு பொருள் நிரப்பும் அல்லது நிரப்ப தூண்டும் என்பது இயற்கை விதி.

அதனால் கான்சியசாக அலாரம் ஆஃப் செய்த உடன் 3 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு ரூல் வைத்து கொண்டேன் அந்த வெற்றிடத்தை நிரப்ப.
இல்லை என்றால் news. எனக்கு பிடித்த டாபிக்காக படிப்பேன். சில kindle-mini reads(10 ரூபாய்) வாங்கி வைத்து கொண்டேன். செய்தி சைட் களை புக் மார்க் செய்து கொண்டேன். டுவிட்டரை காட்டிலும் எனக்கு இது உதவியது.

Step 4: Notifications களை நிறுத்தினேன். முக்கியமாக வாட்சாப். அலுவலக apps
தவிர்த்து அனைத்து appsகளின் notificationகளையும் ஆஃப் செய்தேன்..

பெரும் அளவில் இவை எனக்கு நேரத்தை மிச்ச படுத்தி கொடுத்தது. வேலையில் ஃபோகஸ் கூடியது

ஆனால் சோஷியல் மீடியாவில் தானே நண்பர்கள் உள்ளார்கள். அவர்கள் என்னை மறந்து விட்டால்? என்ற எண்ணம் தோன்றியது.
உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் உங்களை கண்டிப்பாக தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள். கவலை வேண்டாம்.

என் சொந்த பிரச்சனைகளை பற்றி @teakkadai1 அண்ணனிடம் புலம்பி தீர்த்த போது என்னுடைய டிவிட்டர் அடிக்ஷன் பற்றி கூறினேன். ஒரு எளிமையான
solution குடுத்தார். "தினமும் மதியம் சோம்பேறி தனமாக தோன்றும் போதோ, இரவில் அரை மணியோ ஒரு மணி நேரமோ, வார இறுதி போன்ற நாட்களில் வந்தால் போதும்.

நீங்கள் ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்து கொள்ளுங்கள் . அதில் உள்ள tweeps களி TL லை பார்த்தாலே போதும். தேவையான updates கிடைத்து விடும் என்று. "
அதை இம்பிளிமெண்ட் செய்து கொண்டிருக்கிறேன்.

திரும்ப வந்து டுவீட்ட தொடங்கிய போது mind clutter ஃப்ரீயாக இருந்தது. எல்லா டுவீர்களுக்கும் கருத்து சொல்லாமல் இருக்க முடிகிறது.

இதை இப்படியே தொடர விழைகிறேன். என்னை நலம் விசாரித்த, தேடிய அனைத்து இதயங்களுக்கும் நன்றி. நீங்களும் முயற்சி
செய்து பாருங்கள். கீழ சில முன்னேற்ற statistics.

Before Vs After
Total times I picked up phone during the period kept reducing
Increased Reading time
இன்னும் அழகாக பிளான் செய்து டிராக் செய்திருக்கலாம்.

வேறு ஒரு எக்பெரிமெண்டில் முயற்சி செய்து பதிவிடுகிறேன்.

நீங்களும் இதை தொடங்கினா #21DaysWithoutSocialMedia

என்று பதிவு செய்து என்னை டேக் செய்யுங்கள்❤️

all the best🙆‍♂️🙏
You can follow @_VforViking.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.