

Parallel Universes & Neutrino (மாற்று பிரபஞ்சமும் நுண்நொதுமியும்)
#ParallelUniverses என்பது #ParallelDimension, #AlternateUniverse or #AernateReality ஆகிய மாற்று பெயர்களால் ஆங்கிலத்திலும் #மாற்றுபிரபஞ்சம், #மாற்றுபரிணாமம் அல்லது #இணையானஉலகம் பெயர்களால் தமிழிலும்

அழைக்கப்படும். அதாவது நாம் வாழும் பிரபஞ்சம் அல்லது உலகம் போன்றே இன்னொரு பிரபஞ்சம் இருக்கும் என்பது தான் இந்த மாற்று பிரபஞ்சஞ்சத்திற்கான அடிப்படை கோட்பாடு இது ஒரு மிகப்பெரிய விவாதம் இதைப்பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக குறிப்பிடுகிறேன். அதற்கு முன் இது உள்ளது என்பதை மேலும்

வலுப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது.அது என்னவென்றால் பூமியில் இருந்து பிரபஞ்சத்துக்கு செல்லும் நுண்நொதுமிகள் தான். இதை விரிவாக கூறமுன்னர் நுண்நொதுமி என்றால் என்ன என்று சாராம்சமாக கூறுகிறேன். நியூட்ரினோ (Neutrino) அல்லது நுண்நொதுமி என்பது அணுவின்

அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும்.அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற பிறிதொரு துகள் நொதுமி (நியூட்ரான்/ #Nutron) போன்று நியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை.

சரி இவ்வாறான அணுவிலும் சிறிய நுண்நொதுமிகள் எவ்வாறு மாற்றுப்பிரபஞ்சத்திற்கு சான்றாக அமையலாம் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்.ஆமாம் அதற்கு அண்மையில் #ANITA (Antarctic Impulsive Transient Antenna) வை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற
நுண்நொதுமியின் பயணமே காரணம்
நுண்நொதுமியின் பயணமே காரணம்

அதாவது வழக்கமாக அனைத்து மூலப்பொருட்களும் பிரபஞ்சத்தில் இருந்து பூமியை நோக்கி பயணம் செய்யும் ஆனால் அண்மையில் ஒரு நுண்நொதுமி பூமியில் இருந்து பிரபஞ்சத்தை நோக்கி பயணம் செய்துள்ளது. இதுவரை பிரபஞ்சத்தில் இருந்து வரும் நுண்நொதுமி எங்கே உருவாகிறது என்பதை அறிய முடியாதிருந்தது

ஆனால் இப்பொழுது ஒரு முடிவிற்கு வர வைத்துள்ளது இந்நிகழ்வு அதாவது இப்பிரபஞ்சத்தை போன்ற இன்னோர் பிரபஞ்சத்தில் உருவாகி வழக்கமாக பூமியை அடைகின்றதென்பதையும் நம்பூமியை போன்ற ஆனால்
Reverce இல் இயங்கும் இன்னொரு கிரகம் உள்ளது என்பதையும் முன்வைக்கின்றனர் ஆராச்சியாளர்கள்.
Reverce இல் இயங்கும் இன்னொரு கிரகம் உள்ளது என்பதையும் முன்வைக்கின்றனர் ஆராச்சியாளர்கள்.

ஆனால் இதன் உண்மைத்தன்மை பற்றி இனிவரும் காலங்களில் தான் அறிய முடியும். Neutrino Reverse இல் சென்றதற்கு ஒளித்தெறிப்பு காரணமில்லை என்றும் முடிவை அறிவித்துள்ளனர்.
உங்கள் ஆர்வத்தை பொறுத்து Parallal Universe பற்றி நீண்ட நெடிய பதிவு கொடுப்பேன்.
நன்றி
#குயின்சன் #Kuinsan
உங்கள் ஆர்வத்தை பொறுத்து Parallal Universe பற்றி நீண்ட நெடிய பதிவு கொடுப்பேன்.
நன்றி
#குயின்சன் #Kuinsan