#PettaOnSunTv
பேட்ட எங்க ரஜினி எங்களுக்கு திரும்பவும் கிடைத்த படம் .

இதற்கு முன் லிங்கா கபாலி காலா போன்ற படங்கள் வந்தாலும் என்னவோ தலைவர் படம் பார்த்த ஃபீல் வரல

அதை ஒட்டும் மொத்தமாக தீர்த்து தலைவர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் @karthiksubbaraj (1/10)
படத்தின் முதல் பார்வை முதலே அப்படி ஒரு ஈர்ப்பு ஒவ்வொரு போஸ்டரும் 1000 வாலா பட்டாசு.

அதுவும் அந்த முறுக்கு மீசை வெள்ளை வேஸ்டி சட்டை நாங்கள் யாரும் எதிர் பார்க்காத ஒன்று.

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே என்று தோன்றியது.(2/10)
படத்தின் பாடல்கள் பற்றி சொல்லாமல் பேட்ட படத்த பற்றி பேச முடியாது.

என்ன பொறுத்த வரையில் கடந்த 20 வருடங்களில் தலைவரின் the best ஆல்பம் இது தான்.

அதுவும் அந்த உல்லாலா பாட்டு காலம் கடந்து நிற்கும்.
(3/10)
படம் ரிலீஸ் fdfs ஆபீஸ் லீவ் போட்டாச்சு வழக்கம் போல அடிச்சு புடிச்சு உள்ள போய் ஆச்சு.

நீண்ட நாள் கழித்து அதே டைடல் கார்டு 😍 படம் ஆரம்பிச்சி அரை மணி நேரம் தலைவர் intro தான் .

பிறகு ரொமான்ஸ் காமெடி என்று அக்மார்க் ரஜினி படத்துக்கு உண்டான எல்லா அம்சங்களும் இருந்தது (4/10)
இந்த ஒரு சீன் போதும் மொத்த ஃபர்ஸ்ட் halfkkum .

ஒரு மாஸ் சீன் என்றால் back ground music போட்டு சும்மா நடக்கரது இல்ல பாக்கற ஆடியன்ஸ் தங்களை மெய் மறந்து கைத்தட்டலோ விசிலோ அடிக்கணும்.

அதை சுப்புராஜ் முதல் பாதி முழுவதும் செய்து காட்டி இருப்பார் .(5/10)
முதல் பாதிக்கு அந்த ஃபுட் பால் சீன் என்றால் 2 பாதிக்கு இந்த ஒத்த சீன் போதும்.

ப்பா இந்த சீன்க்கு தியேட்டரில் வந்த வரவேற்பு அப்படியே கண்ணுகுள்ளையே இருக்கு.

இந்த சீன்க்காகவே அடுத்த ஷோவும் போறோம்டானு முடிவு பண்ணிட்டேன் (6/10)
அப்புறம் இந்த செகண்ட் ஹாஃப் length அப்டி இப்டினு கத விடறவங்களுக்கு ஒரு ஒன்னும் மட்டும் சொல்லுங்க.

செகண்ட் ஹாஃப் ல எந்த சீன் தேவை இல்லாம இருக்கு அப்படி ஒரு சீன் கூட இருக்காது ஒவ்வொரு சீனும் படத்தோட ஒன்றியே இருக்கும். (7/10)
கிளைமேக்ஸ் சம்பவம்னா அப்படி ஒரு சம்பவம் தலைவா என்ற சத்தம் தியேட்டர் முழுவதும் ஒலித்தது.

20 வயது உள்ளவர்கள் முதல் 60 வயது உள்ளவர்கள் வரை தன்னோடு சேர்ந்து ஆட வைத்தார்.

தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஒரு பாட்டில் ஹார்லிக்ஸ் ஐ ஒரே டைம்ல குடிச்ச மாதிரி அப்படி ஒரு எனர்ஜி.(8/9)
தலைவா பழைய ரஜினி மாதிரி ஒரு துள்ளான ரஜினியை எப்ப பார்ப்போம் என்று இருந்த ரசிகர்களுக்கு ,

இந்த ஆட்டம் போதுமா கொழந்த என்று நாம் எதிர்பார்த்ததற்கு மேல் நம்மளை திருப்தி படுத்தி விட்டார் (9/10)
ரஜினியால் பழைய ரஜினி படம் மாதிரி அவரால் இனி பண்ண முடியாது எண்ணி கொண்டு இருந்தார்கள் .

'நான் விழ்வேன் என்று நினைத்தாயோ' என்று அவர்கள் முஞ்சில் கரியை பூசினார்.(10/10)
You can follow @Manirat70555490.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.