Thread...
"சாதிவெறி என் ரத்தத்துல ஊறிப் போயிருக்கு. என்னால இத ஏத்துக்க முடியாது" இது பேட்ட படத்தில் மகேந்திரன் பேசும் வசனம். தன் மகள் பூங்கொடி ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறார் என தெரிந்ததும் முதலில் கோவப்படும் மகேந்திரன், தன் மகளுக்காக இறங்கிவந்து, திருமணத்திற்கு சம்மதிக்கிறார். 👇
ஆனால் பூங்கொடியின் அண்ணன்களோ, தனக்கு சாதியும், கவுரவமும் தான் பெரிது என நினைத்து மாலிக், பூங்கொடியை கொல்ல நினைக்கின்றனர். அதில் மாலிக் உயிரிழக்க, பூங்கொடி, அவர் மகன் அன்வர், பேட்ட ஆகியோர் தப்பிக்கின்றனர். ஆனாலும் அன்வரை கொல்ல பூங்கொடியின் அண்ணன் விடாமல் துரத்துகிறான். 👇
அதில் இருந்து அவர்களை காப்பாற்றுவதுதான் பேட்ட படத்தின் கதை. நன்றாக கவனித்து பாருங்கள். சாதி ஆணவக் கொலைக்கு எதிராக மராத்தி மொழியில் எடுக்கப்பட்ட சாய்ரத், தமிழில் பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் எந்த அரசியலை பேசியதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே சாதி அரசியலை பேட்ட பேசியது. 👇
நியாயமாக பார்த்தால், ரஜினியை எதிர்ப்பவர்கள் கூட இந்த படத்தை, சாதி ஆணவக் கொலைக்கு எதிரான படம் என பாராட்டி, புகழ்ந்து எழுதியோ,பேசியோ இருக்க வேண்டும். ஆணவக் கொலைக்கு எதிரான கருத்தை கொஞ்சம் கமர்ஷியல் மசாலா, மாஸ் காட்சிகள் தூவி சொல்லப்பட்டதை தான் ரஜினி எதிர்ப்பாளர்கள் ரசிக்கவில்லை. 👇
ஏனெனில், ரஜினிக்கான மாஸ் தான் அவர்களின் கண்ணை உறுத்துகிறது. ரஜினி எதிர்ப்பு மட்டுமே ஒற்றை நோக்கமாக கொண்டு வாழ்பவர்களின் சந்தர்ப்பவாதம் வெளிப்பட்ட தருணம் அது. உண்மையில் பேட்ட படத்தை பற்றிய இந்த பதிவு கொஞ்சம் நகைப்பை ஏற்படுத்தலாம்.ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உண்மைபுரியும்.👇
பேட்ட சாதி ஆணவக்கொலைக்கு எதிரான படம் என்பது ஒரு அவுட்லைன் தான். அதில் ரஜினியின் விண்டேஜ் மாஸ் காட்சிகள் சேர்த்து படமாக்கப்பட்ட விதத்தால் ஈர்க்கும்படி இருந்தது. Mass quotient சேர்த்து எடுக்கப்படாவிடில் அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தாத ஒரு படமாக போயிருக்கும். 👇
தமிழ் நிலத்தை தமிழனே ஆள வேண்டும் போன்ற சீமானிச கருத்துகளுக்கும் படத்தில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும்.

"யாருக்கு யாருடா அடிம?"

"புதுசா வர்றவன ஏற்கெனவே இருக்கறவன் எதிர்க்கற அரசியல் இங்கேர்ந்து தான் தொடங்குது"

"இந்த எடம் யாருக்கும் அவங்க அப்பன் வீட்டு சொத்து இல்ல" 👇
போன்ற வசனங்கள் மூலம், ரஜினியை எதிர்க்கும் போலி அரசியல்வாதிகளுக்கும் பதிலடி கொடுத்திருப்பார் கார்த்திக் சுப்புராஜ். அதேநேரம் மணல் கொள்ளையை எதிர்ப்பவராகவும் படத்தில் தலைவர் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்.
"என் மண்வளத்த அழிச்சவன நான் மன்னிக்கவே மாட்டேன்" போன்ற வசனமும் இதற்கு சான்று👇
மணல் கொள்ளை படத்தில் மேலோட்டமாக தான் பேசப்பட்டிருக்கும். ஆனாலும் அதை திரைக்கதையில் சேர்த்தது கார்த்திக் சுப்புராஜின் புத்திசாலித்தனம். அதைவிட முக்கியமாக திருநங்கைகள் குறித்த உயர்வான, மரியாதையான கருத்துகளை படத்தின் ஒரு இடத்தில் புகுத்தியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். 👇
திருநங்கைகள் பிரசவம் பார்த்தபின் குழந்தையை கையில் வாங்கி, கண்ணில் துளி கண்ணீருடன் தலைவர் கொடுக்கும் அந்த நெகிழ்ச்சி, மகிழ்ச்சி ரியாக்‌ஷன்... ப்பா சான்சே இல்ல. தலைவர் இந்த நூற்றாண்டின் நடிகன். படத்தில் இவ்வளவு இருந்தும் முற்போக்குவாதிகள் அமைதி காத்தது உண்மையாகவே வருத்தம்தான். 👇
அப்துல் மறைக்காயர் என்ற இஸ்லாமியர் கண்டெடுத்த பிள்ளைக்கு பேட்ட வேலன் என பெயர் வைப்பது...
பேட்ட வேலனும், மாலிக்கும் அண்ணன், தம்பியாக வளருவது... மாலிக்கின் மனைவியை, பேட்ட வேலன் தங்கையைப் போல் பாவிப்பது...
காலேஜ் படிக்கும் மகளுடன் இருக்கும் பெண்ணுக்கும் காதல் வரலாம் என காட்டியது.👇
மாட்டுக்கறி வைத்திருப்பதாக ஒருவரை அடிப்பது, ஆண்டி இந்தியன், மித்ரோன் போன்ற வசனங்கள், காதலர்களை அடித்து தாலிகட்ட வைப்பது, ராமர் கதை, பெண்களுக்கு சொத்துரிமை, சமூக நல்லிணக்கம், சாதி வெறி போன்ற முக்கியமான பல பிரச்னைகளை பேட்ட படம் பேசியது. 👇
மேற்கூறிய எல்லாமே ஊறுகாய் போல் தொடப்பட்டிருந்தாலும், அதை அழகாக அங்கங்கே பிளேஸ் செய்த விதத்தில்தான் திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தி வெளிப்பட்டது. ஆனால் ரஜினி என்ற ஒற்றை நபருக்காக இன்றும் அந்த படத்தை பார்த்து, கண்மூடித்தனமாக எதிர்ப்பது, கதறுவதெல்லாம் வெறுப்பரசியலின் உச்சம். 👇
என் பதிவை படித்துவிட்டு அரைவேக்காடு என திட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். திட்டுவதால் யாரையும் பிளாக் செய்யவும் மாட்டேன். ஆனால் நான் சொன்னதில் 100% உண்மை இருக்கிறது.

பேட்டயும் அரசியல் படம்தான். நல்ல அரசியலை பேசிய படம்தான். Thanks @karthiksubbaraj

#Petta
You can follow @rahulmanidravid.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.