சீனா இந்திய பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என்றால் ஏன் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள்?? ~ போராளீஸ்

நேரு 1962ல் அக்சாய் சின் பகுதியை சீனாவிடம் இழந்த பிறகு இந்தியா சீனா இடையே ஒரு நிலையான எல்லைக்கோடு என்பது இல்லை. அதன் பிறகு சீனா Salami Slicing முறையில் சிறு சிறு பகுதிகளாக
எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து வந்தது! 2013ம் வருடத்தில் இறுதியாக கிழக்கு லடாக்கின் 640 சதுர கிலோமீட்டர் பகுதியை ஆக்கிரமித்தது!!

இதுபோன்று அடிக்கடி இந்திய எல்லையில் ஊடுருவுவது சீனாவின் வாடிக்கை. இதை கட்டுப்படுத்தும் பொருட்டு எல்லைகளில் ரோந்து செல்ல மற்றும் தளவாடங்களை நகர்த்த
ஏதுவாக சாலைகளை அமைக்க 1999ம் ஆண்டு முடிவெடுத்து வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு! இதன்மூலம் இந்திய சீன எல்லையில் 4643 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் 3409 கி.மீ சாலைகை Border Road Organizationம் மீதமுள்ள 1234 கி.மீ சாலைகளை பொதுப்பணித்துறை
மூலம் அமைக்க திட்டமிட்டு 2000 ஆண்டு தர்புக் முதல் தவுலத் பெக் ஓல்டி வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த சாலைப் பணிகள் ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நத்தையைவிட குறைவான நகர்ந்தது!! இதை அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி எல்லையில் இன்னும் சாலைகள் இல்லாததால்தான்
நமது ராணுவத்தால் ரோந்து செல்ல முடியவில்லை மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க முடியவில்லை என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்!! 2014ல் ஆட்சி மாற்றம் நடந்ததும் கிடப்பில் இருந்த சாலை பணிகள் வேகமாக நடக்க தொடங்கியது. இறுதியாக 2019ல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த சாலை பணி நிறைவடைந்தது
தற்போது அந்த பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் இருந்து எல்லைகளை இணைக்கும் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு முழுமையாக நிறைவடையும். அப்படி நக்கும் பட்சத்தில் இந்தியாவால் 6-8 மணி நேரத்தில் எல்லைக்கு படை மற்றும் தளவாடங்களை நகர்த்த முடியும்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத சீனா 2015 முதலே சிறுசிறு குடைச்சல்களை கொடுத்து வருகிறது. தற்போது 7 வாரங்களாக கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் பாங்யாங் ட்ஸோ என்று மூன்று பகுதிகளில் முகாம் அமைத்து மோதலை உருவாக்கியுள்ளது. இந்த மூன்று இடங்களிலும் சேர்த்து
கிட்டத்தட்ட 10,000 வீரர்கள் மற்றும் தளவாடங்களை குவித்துள்ளது! இதற்கு சற்றும் சளைக்காமல் இந்தியாவும் படைகளை குவித்துள்ளது!! அதுமட்டுமின்றி எல்லையில் சாலை அமைக்கும் பணிகள் எந்த சூழ்நிலையிலும் நிறுத்தபாபடாது என இந்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது! இதனால் ஆத்திரமடைந்த சீனா
எல்லையில் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கியது. இந்த பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. அதன் பின்னர் ஜூன் மாதம் 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இருநாட்டு ராணுவமும் இரண்டு கி.மீ தூரம் பின்வாங்குவது என
ஒப்புக்கொண்டனர். இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் 1997ல் ஐக்கிய முன்னனி அரசு சீனாவுடன் போட்ட ஒப்பந்தத்தின்படி துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்பதாகும். அதுமட்டுமின்றி எல்லையில் இருதரப்புக்கும் பொதுவான Buffer Zone ஒன்று உள்ளது. இது நிலப்பரப்பை பொறுத்து 2 முதல் 5 கி.மீ வரை
உள்ளது. இந்த இடத்தில் பொதுவாக யாரும் ஆயுதங்களுடன் ரோந்து செல்வதில்லை. அப்படி சென்றாலும் ஆயுதங்களை உபயோகிப்பதில்லை. இந்த Buffer Zoneல் தான் சீன ராணுவம் தனது கூடாரங்களை அமைத்தது!! அதற்கு சற்றும் குறையாமல் இந்திய ராணுவம் Mirror Deployment செய்தது!!

ஜூன் 6ம் தேதி நடந்த
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சீனா பின்வாங்கி சென்றதா என்பதை பார்ப்பதற்காக ரோந்து சென்றது கர்ணல் சந்தோஷ் பாபு தலைமையிலான வீரர்கள் குழு. அந்த இடம் Buffering/No Fire Zone என்பதால் ஆயுதங்களை உபயோகிக்கவில்லை இந்திய தரப்பு. (ஆயுதங்கள் வைத்திருந்தும் உபயோகிக்காமல் கண்ணியம் காத்தனர்)
ஆனால் இந்திய வீரர்கள் வருவார்கள் என்று தெரிந்தே கத்தி, ஆணிகள் அடித்த கட்டை போன்றவற்றால் திடீர் தாக்குதல் நடத்தியது சீன இராணுவம். இதில் நிலைகுலைந்த கர்ணல் சந்தோஷ் பாபு மற்றும் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த செய்தியறிந்த
மற்ற வீரர்கள் சுமார் 100 வீரர்கள் கொண்ட குழுவினர் சென்று 300க்கும் மேற்பட்ட வீரர்கள் சீன முகாமிற்கு சென் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் இந்திய தரப்பில் ஒரு கர்ணல் உட்பட இருபது வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் 18 வீரர்கள் படுகாயமும் 76 வீரர்கள் லேசான காயமடைந்ததாக தெரிவித்தது. அதேசமயம் சீன தரப்பில் இதுவரை உயிரிழப்பு மற்றும் சேதங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சீன தரப்பில் 43 வீரர்கள் வரை உயிரிழந்து இருக்கலாம் எனவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்
அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி தாக்குதல் நடந்த மறுநாள் செவ்வாய்கிழமை ஒரு பெரு வெடிப்பு சத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிலச்சரிவில் சீன முகாம் ஒன்று முழுவதும் புதைந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Planet labs வெளியகட்ட செயற்கைக்கோள் படங்களில்
சீன கட்டுமானம் இருந்த இடங்களில் நிலச்சரிவால் ஏற்பட்ட சிதிலங்கள் காணப்படுகிறது. இது சீன தரப்பில் உயிரிழப்பை மேல் அதிகமாக்கி இருக்கும் என அஞ்சப்படுகிறது! இந்தியாவோ சீனாவோ எல்லைகளில் இருந்த Buffering zoneஐ தாண்டி முன்னேறவில்லை என்பதுதான் உண்மை.
You can follow @Perumal_Pradeep.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.