#Nepotism சுஷாந்த் சிங் இறந்ததுல இருந்து நம்ம அதிகம் கேள்விப்படுற வார்த்தை. அது பாலிவுட்டில மட்டும் தான் இருக்கா? , நம்ம தமிழ் சினிமாவிலுமா?. முதல்ல Nepotism னா என்ன? - அதைப் பற்றி என் கருத்து இந்த த்ரெட்ல!
(1/11)

#CineversalS_thread
#Nepotism - தம் வாரிசுகளுக்கு (மகன், மகள், அண்ணன், தங்கை) எந்த திறமையும் இல்லாத போதும், தன் செல்வாக்கை பயன்படுத்தி வாய்ப்புகள், ஆதாயங்கள் கிடைக்க செய்தல்!

#Favouritism - தனக்கு விருப்பமானவருக்கோ, தெரிந்தவருக்கோ எந்த தகுதியும் இல்லையென்றாலும் வாய்ப்புகள் கிடைக்கச் செய்வது (2/11)
ஆம் பாலிவுட்டில் Nepotism தலைவிரித்து ஆடுகிறது. Aliya bhatt, Tiger shroff போன்றவர்கள் கூட எதோ நடிப்பு, நடனம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதுவுமே அறியாத Sonam Kapoor, Ananya pandey உள்ளிட்ட பலபேர் இன்னும் தாக்குப்பிடிக்க காரணம், அவர்களின் குடும்ப ஆதரவே! (3/11)
#KaranJohar அதை ஆதரிப்பதில் முதல் நபர். நல்ல நடிகர்களை ஒதுக்கிவிட்டு, வாரிசு நடிகர்களுக்கே பெரும்பாலும் வாய்ப்பளிப்பார். வாய்பளிக்காதது கூட பரவாயில்லை, ஆனால் அவர்களை கேலி செய்வது, கீழானவர்கள் போல நடத்துவது, ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவார்! (4/11)
#karanjohargang tagல் நிறைய தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வளர்வதற்கு கரண் போன்ற இயக்குநர்கள் மட்டுமல்ல, மக்களும் முக்கிய காரணம். கதையம்சத்துடன் வெளியாகும் புதுமுக நடிகரின் படத்தை விட, குப்பை என தெரிந்தும் வாரிசு நடிகர்களின் படத்தை ஆதரிப்போம், பின்தொடர்வதில் கூட பாரபட்சம். (5/11)
பாலிவுட்டில் மட்டுமல்ல, தெலுங்கு சினிமாவில் கூட நாலு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. இவர்களை ஒப்பிடுகையில் தமிழ் சினிமாவில் கம்மி என்று சொல்லலாமே தவிர, முழுமையாக அப்படி இல்லை என ஒதுக்கிவிட முடியாது! (6/11)
மணிரத்னம் படத்தில் நடிக்க பலபேர் கனவு கானும் போது, கௌதம் கார்த்திக் முதல் படமே அவர் இயக்கத்தில் நடித்தார். வரிசையாகப் பல தோல்விகள் கொடுத்த பின்னும் விக்ரம் பிரபு, சிபிராஜ் எல்லாம் சினிமாவில் தொடர்கிறார்களே, இதை எந்த சினிமா பிண்ணனியும் இல்லாதவன் யோசித்து பார்க்க முடியுமா? (7/11)
இங்கு த்ரூவ் விக்ரமால் மட்டுமே, ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் ப்ரின்ஸ் ஆக முடியும். நடித்த முதல் படம் நல்லாயில்லை என்றால் தூக்கி கடாசிவிட்டு, மீண்டும் ஒருமுறை எடுக்க முடியும். விக்ராந்த், விதார்த், போன்றவர்கள் நல்ல படம் நடித்தாலும் நான்காம் தட்டு ஹீரோக்களாகவே இருப்பார்கள் (8/11)
ஆனால் நம் மக்களை ஒரு விதத்தில் பாராட்டியே ஆக வேண்டும். வாரிசு நடிகர்கள் அறிமுகத்திற்கும், தக்க வைத்துக் கொள்வதற்கும் மட்டுமே அவர்கள் செல்வாக்கை பயன்படுத்த முடியும். திறமை இல்லையென்றால் நம் மக்கள் ஒதுக்கி விடுகிறார்கள். பெரும்பாலும் அவர்களின் படங்கள் ஓடுவதில்லை (9/11)
தனுஷ், சிம்பு உள்ளிட்டவர்களின் படமும் பெரும்பாலும் ஓடுவதில்லை. அவர்களின் சில நல்ல படங்களுக்காகவும், பிற திறமைகளுக்காக (நடிப்பு, நடனம், பாடல்) மட்டுமே அங்கீகரிக்கிறோம். கார்த்தி, ஜெயம் ரவி போன்றவர்கள் சிறந்த கதைகள் தேர்வு செய்வதின் மூலமே பல வெற்றிகளை தர முடிகிறது. (10/11)
இன்றைய தலைமுறை நடிகர்களாக பார்க்கப்படும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கூட எந்த சினிமா பின்புலம் (சினிமாவிற்குள் வந்த பிறகு சிறு ஆதரவு கிடைத்திருக்கலாம்) இல்லாமல் ஜெயித்தவர்களே. திறமைக்கு மதிப்பளிப்போம். நன்றி. கூறியதில் தவறிருப்பின் திருத்தவும். (11/11)
You can follow @CineversalS.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.