மை டியர் ஃபிரெண்ட்ஜ்,
Android box பத்தினபதிவு மூலமா subscription இல்லாம LiveTVகளை துல்லியத்தரத்தில் பார்க்கும் ஒரு அற்புத உலகத்திற்கு உங்களை கூட்டிட்டுப்போனேன். அதை நீங்க மறந்துருக்க முடியாது. அதன் தொடர்ச்சியா firetvStickல யூஸ் பண்ண சில appகளை அறிமுகப்படுத்தலாம்ன்னு இருக்கேன்.
Android box பத்தினபதிவு மூலமா subscription இல்லாம LiveTVகளை துல்லியத்தரத்தில் பார்க்கும் ஒரு அற்புத உலகத்திற்கு உங்களை கூட்டிட்டுப்போனேன். அதை நீங்க மறந்துருக்க முடியாது. அதன் தொடர்ச்சியா firetvStickல யூஸ் பண்ண சில appகளை அறிமுகப்படுத்தலாம்ன்னு இருக்கேன்.

இந்த லாக்டவுன்ல அதிகம் கவனம் பெற்ற appனா அது Telegramதான். ஆனானப்பட்ட தமிழ்பாறைகளையே பிரஷர் மாத்திரை போடீங்களா ப்ரோன்னு கேட்டு உக்காரவச்சுருச்சு. இன்னிக்கி உள்ளூர் மற்றும் உலக சினிமான்னு எதுனாலும் Telegramல தேடிட்டு அப்புறமா torrentக்கு செல்பவர்கள் அனேகர்.
ஒன்றரை ஜிபிகளுக்கு மிகாமல் துல்லிய தரத்துடன் 720pகளில் கண்முன் விரியும் படங்களை வெறும் 6inch மொபைல் திரையான சின்ன வட்டத்துக்குள் அடைத்து பார்க்கலாமா? சரி, Telegram சேனல்களில் வரும் படங்களை டவுன்லோட் பண்ணாம firetv stick மூலமா டிவில பாக்க வழி இருக்கானா? இருக்கு.
App பேரு TMP - Telegram Media Player. இந்த பேருல Apple storeல ஒரு app இருந்தாலும் நான் சொல்றது வேற. இதோட லோகோ பாக்க ஒய்யாரமான ஒரு சோஃபா போலருக்கும் (இல்ல எனக்கு அப்டி தெரியுதா?). இதை மட்டும் உங்க SmartTVல இன்ஸ்டால் பண்ணிடீங்கன்னா அந்த லோகோ போலவே ஜம்முனு உக்காந்து படம் பாக்கலாம்.
இந்த app Google PlayStoreல இருந்தாலும் இந்த thread இறுதில ஒரு Telegram சேனல் லிங்க் போடறேன், அதுலேருந்து தரவிறக்கிக்கோங்க. காரணம், நீங்க இந்த appபை டிவிக்கு அனுப்பணும் இல்லையா? அதுக்கு apk fileலா தேவை.
எந்த ஒரு apk fileலையும் மொபைல் டூ டிவி/firetv stick அனுப்ப என் அனுபவத்துல ரெண்டு app suggest பண்றேன்.
1. App2Fire 2. Send Files to TV
இதுல நான் strongகா suggest பண்றது முன்னவர் App2Fire ரெண்டுமே லீகல் appகள். கவலை வேண்டாம், Google PlayStoreல இருக்கு.
1. App2Fire 2. Send Files to TV
இதுல நான் strongகா suggest பண்றது முன்னவர் App2Fire ரெண்டுமே லீகல் appகள். கவலை வேண்டாம், Google PlayStoreல இருக்கு.
App2Fire உங்க மொபைல்ல இன்ஸ்டால் பண்ணனினதும் நேரா அதன் கடைசி tabபான Setupக்கு போய்டலாம். மொபைல் மற்றும் டிவி/firetv stick ரெண்டும் ஒரே WiFiல் கனெக்ட் ஆகியிருக்கும் பட்சத்தில் 'Search Fire TV' கொடுக்கவும். இரண்டொரு நிமிடத்தில் உங்கள் டிவி/firetv stickன் ip அட்ரஸ் பல்லிளிக்கும்.
டிவி/firetv stick வாங்கின சமையத்தில் ஞானஸ்தானம் செய்து வைத்த பெயரை சரி பார்த்து 'Save' பட்டனை அழுத்தவும். தற்பொது இந்த appல் உங்கள் டிவி/firetv stickன் ip பதிவாகிவிட்டது. நீங்கள் VPN உபயோகிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் இந்த ipயை Save செய்யவேண்டும்.
இப்போது உங்கள் மொபைலும் டிவியும் App2Fire வழியே கனெக்ட்ஆகிவிட்டது. அடுத்து அதே Setup tab மேலே upward arrow iconனை தட்டவும். அது உங்கள் மொபைலின் Internal memory கதவை திறந்துவிடும். அனுப்பவேண்டிய appபை கண்டறிந்து select செய்து 'Upload' பட்டனை தட்டவும்.
தட்டிய மாத்திரத்தில் நாடோடிகள் சசிகுமார் கூப்பிட்ட சொல்லிற்கு சிட்டா பறந்துவரும் மாமன்மகள் போல் டிவிக்கு சென்றுவிடும். இனி மொபைலுக்கு வேலையில்லை, பக்கத்தில் பாப்பா இருந்தால் YouTube ரைம்ஸ் பார்க்க குடுத்துடுங்க. அடுத்து டிவியை டார்கெட் பண்ணனும்.
Android டிவி என்றால் அதன் internal memoryயை access செய்யும் பட்சத்தில் Download folderல் இந்த appபை கண்டுபிடித்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இன்ஸ்டால் செய்வதற்கு முன் settingsல் Unknown Sources enable ஆகியிருப்பது அவசியம்.
Firetvstick என்றால் ES Explorer Pro என்று app install செய்து அதில் Download folder சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். (ESExplorerPro உங்கள் firetvstick இல்லையென்றால் அதுவும் கீழ்கண்ட Telegram சேனலில் கிடைக்கும்) அதற்கு முன் ADB Developer மற்றும் Unknown Sources ON செய்யவேண்டும்.
மேல்சொன்ன வழிமுறையில் TMP appபை மொபைல் டூ டிவி/firetvstick அனுப்பி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். Appபை ஓபன் செய்ததும் உங்கள் Telegramஇல் பதிந்த மொபைல் எண் மற்றும் OTP கேட்கும். குடுத்த மாத்திரத்தில் உங்கள் மொபைலில் எந்தந்த சேனல்களில் இருக்கிறீர்களோ அவையனைத்தும் டிவி திரையில் காணலாம்
இந்த appல் எந்த மெசேஜ்களும் படிக்க முடியாது. வீடியோ பைல்களை தவிர வேரெதுவும் பார்க்கமுடியாது. இதுல என்ன பைல்கள் கொசகொசன்னு இருக்கு. இதுல எப்புடி தேடி பாக்குறதுன்னு என்னைபோல அலுத்துக்கொள்ளுபவர்கள் 'Link to Files' என்னும் botக்கு அனுப்பினால்
டிவியில் sync ஆகி முதலில் வந்து நிற்கும். அப்புடியே ஓபன் பண்ணி பாப்கார்னும் கையுமாக உக்கார்த்துவிடலாம். TMP appபின் சிறப்பம்சம், video fileல் format பொறுத்து player செலக்ட் செய்துகொள்ளலாம். நான் யூஸ் செய்வது vlc. எந்த பால் போட்டாலும் six அடிக்கும் player அது.
Firetv stick வைத்திருப்போர் Telegramல் account இருப்பின் இந்த சேனலில் இணைந்துகொள்ளுங்கள். வடக்கங்கள் ஆதிக்கம் இருந்தாலும் ஒருவருக்கொருவர் செமையா ஹெல்ப் செய்துகொள்வர். முக்காவாசி பேர் ரொம்ப நல்லா பழகுவர், எந்த சந்தேகம்னாலும் பொறுமையா தெரிஞ்சதை சொல்லுவர்.
Firetv Stick/Android TV with Unlimited internet access வைத்திருப்போர் இந்த appபை ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள். Unbelievable cinematic experience guaranteed! சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் கேளுங்க, தெரிஞ்சத சொல்றேன் or தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன்.
Amazon Firetv stick பத்தின எனது முந்தின பதிவு! https://twitter.com/nkchandar/status/1202653828408999936?s=20