மகாகவி காளிதாசன் இயற்றிய அற்புத ஸ்லோகம் சியாமளா தண்டகம். தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார். கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை
உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம். பெறலாம்.
1.
மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், நீல மணியின் ஒளியுடன் கூடிய
அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் தியானம் செய்கிறேன்.
2.
சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும்,
நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ஸ்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.
3.
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப
வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா
ஸூகப்ரியே

உலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின்
புத்ரியுமான பராசக்தியே உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன். நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக. கிளி என்னும்
சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்.
4.
ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,
க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!

அம்ருதம் எனும் கடலின் மத்தியில்,
மனதைக் கவரும் சிறப்புடைய தீவில் வில்வ மரங்கள்
சூழ்ந்த பிரதேசத்தில் கற்பக விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே! யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே, அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே.
5.
ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா ஸம்ப்ரமாலோல
நீபஸ்ரகாபத்த சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே
சேகரீபூத
சீதாம்சுரேகா மயூகாவளீநத்த
ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக
ஸம்பாவிதே!

நீ பாடத்துவங்கி அந்த ஸங்கீத ரஸத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் உனது முதுகெலும்பின் அடிப்பாகம் வரை நீண்ட கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப புஷ்ப கொத்துக்கள் அசைந்தாடுவதே தனி அழகு. ஹே! ஹிமவானின்
புதல்வியே! நீ சிரஸில் ஆபரணமாக அணிந்த சந்திர கலையின் கிரணங்களால் சூழப்பட்ட சுருள் சுருளான கருங்கூந்தல்களுடன் மிளிர்பவளே, சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுபவளே!
6.
காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்ப
ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே
சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே
ஸூராமே ரமே
காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ எனும் பிரமைக்குரித்தானவளே, அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே! கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே! மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே!
7.
ப்ரோல்ல ஸத்வாலிகா மௌக்தி கச்ரேணிகா
சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்
தலந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த
ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீஸ்வரே ஸூஸ்வரே பாஸ்வரே.
ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும் கன்னங்களில்
கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணை நாதத்துடன் இணைந்தவளே. வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்
குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே, மந்திர சித்தி பெற்ற
சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே.
8.
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த
தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே. திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலாலஸச் சக்ஷு
ஜராந்தோலன ஸமாக்ஷிப்த கர்ணைக
நீலோத்பலே, ச்யாமலே
பூரிதா சேஷலோகாபிவாஞ்
சாபலே நிர்மலே.

சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற
கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே, நீலநிறத் திருமேனியுடையவளே. லோகங்களெல்லாம் நிரப்பும் விரும்பிய பலன்களை உடையவளே, பரிசுத்தமானவளே! ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.
9.
ஸ்வேத பிந்தூல்லஸத்பால லாவண்ய நிஷ்யந்த
ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே
ஸர்வ மந்த்ராத்மிகே. ஸர்வ விச்வாத்மிகேகாளிகே
முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக
கற்பூரதாம்பூல கண்டோத்கரே ! ஞானமுத்ராகரே,
ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, கரே !

நெற்றியில் காணும் வியர்வைத்
துளிகளின் கூட்டமோ என்று பராமரிக்கக்கூடிய சோபை மிகுந்த புல்லாக்கு ஆபரணம் அணிந்தவளே! மந்திரங்களுக்கு இருப்பிடமானவளே! வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே, ஞானமே சின்னமாய் உடையவளே, சம்பத்துகள் அருள்பவளே, கையில் எழில் மிகுந்த தாமரை பூ ஏந்தியவளே!
10.
குந்த புஷ்பத்யுதி ஸ்நிக்த தந்தாவலீ
நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர
சோபாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே
முல்லை புஷ்பம் போல் சோபையுள்ள பல்வரிசைகளின் பிரகாசத்துடன்
கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே.
11.
ஸுலலித நவயௌவனாரம்ப சந்த்ரோத யோத்வேல லாவண்ய
துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ஹ்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா
ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
துவங்கும் யௌவனத்தின் சந்த்ரோதயம் போன்று சோபையுடன் கூடிய பாற்கடலிலிருந்து வெளிப்படும் சங்கின் அழகையும் மிஞ்சும் கழுத்துடையவளே.
நளின நடையுடையவளே! சிறந்த இரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே, மங்கள ஸ்வரூபிணியே!
12.
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே, யோகிபி: பூஜிதே:
விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் கங்கணா லங்க்ருதே,
விப்ரமாலாங்க்ருதே,
ஸாதுபிஸ்ஸத்க்ருதே !

இரத்தினங்களை இழைத்த வங்கியின் ஒளிக்கிரணங்களால் சோபிக்கின்ற தோள்களுடன் விளங்குபவளே, யோகிகளால் வணங்கப்படுபவளே! திசைகளெல்லாம் ஒளிர்ப்பிக்கும் ப்ரகாசம் உடைய கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்டவளே, உபாஸகர்களால் பூஜிக்கப்படுபவளே!
13.
வாஸராரம்பவேலா
ஸமுஜ்ரும்பமாணாரவிந்த
ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம
ஸந்த்யாய மானாங்குலீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ)
கண்டலே,
சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே

சூர்யோதயத்தில் மலர்ந்த தாமரை
புஷ்பத்திற்கு ஒப்பான கைகளையுடையவளே,
எப்பொழுதும் பெருக்கெடுக்கும் தயையுடையவளே, இரண்டற்று ஒன்றேயானவளே, கைகளை அலங்கரிக்கும் இரத்தின மோதிரங்களின் ஒளியில் சாயங்கால சிவந்த வானம் போன்றதில், நகம் எனும் சந்திரனைப் போல் பிரகாசமுடைய தளிர் விரல்களுடையவளே, ஞானமாகிற ஒளியினால் சூழப்பட்டவளே, ஒளிரும் குண்டலங்கள் பூண்டவளே.
14.
தாரகா ராஜிநீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ
வலிச்சேத விஸீஸ முல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே, கிங்கர கரே
ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோப பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே
லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, மஞ்ஜூ ஸம்பாஷணே
நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பான
ப்ரகாசமான முத்து மாலைகளின் வரிசை
யினால் சோபையூட்டப்பட்ட உயர்ந்த பரந்த மார்பகத்தின் பாரத்தினால் சிறிது மடிந்து வளைந்த இடையுள்ளவளே! கடல் போன்ற ஸௌந்தர்யங்களை உடையவளே, கைகளில் வீணை ஏந்தியவளும், குபேரனால் வணங்கப்படுபவளும் ஆனவளே! தங்கக்குடத்திற்கு ஒப்பான
மார்பின் பாரத்தினால் வணங்கினவளே, மூன்று லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே, இனிய பேச்சுடையவளே.
15.
சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே
பத்ம ராகோல்லஸத் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே,சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு
கச்சன்ன சாரு சோபா பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர
மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்கலே ச்யாமளே.

மன்மதனின் வில்லின் நாணுக்கொப்பான சலங்கை பொருந்திய அரை ஞாண் பூண்டவளே, ஜரிகை வஸ்த்திரம் அணிந்தவளே. பத்மராகக் கல்லினால் இழைத்த ஒட்டியாணத்தின் சோபையுடன் கூடிய
இடையுடையவளே, பௌர்ணமி நிலவு போன்று குளிர்ந்தவளே. மலர்ந்த பலாச பூ போல் சிவப்பு நிறப் புடவையினால் மூடப்பட்ட துடைகளின் பிரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தூரத்தினால் சிவந்த ஐராவதத்தின் துதிக்கை போன்று கையை உடையவளே, எல்லையற்ற வைபவங்களுடன் கூடியவளே, இந்திரநீல போன்ற நிறம் உடையவளே.
16.
கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸிதானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தல ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ
ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோகரிங்க்கந்ந கேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.நிர்மலே!

அழகிய மென்மையான நீலத்தாமரை பூவிலான மன்மதனின் அம்புறாத்
தூணியோ என்றெண்ணக் கூடிய கொடி போன்ற கணுக்கால்களை உடையவளே, அழகிய விளையாடும் நடையுடையவளே. அடிபணியும் திக்பாலக ஸ்த்ரீகளின் சுருளான கருங்கூந்தல் கூட்டத்தின் நீலநிற சோபையினால், மானுடன் சம்பந்தம் சொல்லக்கூடிய அறுகம்புல் தளிர்களா அவை என்றெண்ணும்படியான, நகம் எனும் சந்திரன் போன்ற மிகையான
பிரகாசத்துடன் விளங்குபவளே.
17.
ப்ரஹ்வ தேவேச, பூதேச வாணீச கீநாச
தைத்யேச, யக்ஷேச, வாகீச, வாணேச,
கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலாதபோத் தாமலாக்ஷவர
ஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.
ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே,
ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன
பத்மாஸனே,
சங்க்க பத்மத்வயோபாச்ரிதே

வணங்குகின்ற இந்திரன், விஷ்ணு,
சிவன், யமன், வருணன், குபேரன், ப்ரஹ்மா, நிருருதி, வாயு, அக்னி, இவர்களுடைய கிரீடத்திலுள்ள மாணிக்க மணிகளின் ஒளியால் இளம் வெய்யில் போல் சிவந்ததும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களை உடையவளே, உமாதேவியே! நவரத்தினங்களால்
இழைக்கப்பட்ட அழகிய சிறந்த ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளே, அழிவற்றவளே. இரத்தினம் போன்ற தாமரையில் இரத்ன ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்து, சங்கு, தாமரை இரண்டாலும் சேவிக்கப்படுபவளே.
18.
தத்ரவிக்னேச துர்க்கா, வடுக்ஷேத்ர பாலையுதே
மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே,
மஞ்ஜூளாமேனகாத்யங்க நாமானிதே,
பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி
வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே,
சக்திபிஸ்ஸேவிதே! தாத்ரி லக்ஷ்ம்யாதி
சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !
பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங் கனா மண்டலைரர்ச்சிதே

விநாயகர், துர்க்கை, ப்ரம்மச்சர்யம் பூண்ட பிரம்ம தேவதைகள், க்ஷேத்ரபாலன் இவர்களுடன்
கூடியவளே. ஆனந்தத்தில் திளைக்கும் மதங்க முனிவரின் புதல்விகளால் சூழப்பட்டவளே. மஞ்ஜுளா மேனகா முதலிய அப்ஸர ஸ்தீரிகளால் போற்றப்படுபவளே, 8பைரவர்கள் எனும் தேவர்களால் சூழப்பட்டவளே. பூமி, லக்ஷ்மி முதலிய 8சக்திகளுடன் கூடியவளே. ப்ராம்ஹீ முதலிய மாத்ருக்கள் எனும் எழுவரால் அலங்கரிக்கப்பட்டவளே.
யக்ஷர், கந்தர்வர், ஸித்தர் இவர்களின்
ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுபவளே.
19.
பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யாச
ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாபிநந்திதே
பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே,
யோகினாம் மானஸே, த்யோதஸே,
சந்தஸாமோஜஸா ப்ராஜஸே
கீதவித்யா வினோதாதி த்ருஷ்ணேன
க்ருஷ்ணேன
ஸம்பூஜ்யஸே
பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே,
விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர்கீயஸே

மன்மதனைப் போன்று மயங்க வைக்கும் ரூபலாவண்யம் உடையவளே, மன்மதன் ரதிதேவி இவர்களாலும் பூஜிக்கப்படுபவளே, பிரியமுள்ள வஸந்தருதுவினால் சந்தோஷப்படுத்தப்படுபவளே, பக்தியுள்ளோருக்கு மோக்ஷமும் அனுக்ரஹமும்
செய்கிறாய். யோகிகளின் மனதில் பிரகாசிக்கிறாய். வேதங்களின் ஸாரத்தில் உறைந்திருக்கிறாய். ஸங்கீத ரஸானுபவத்தில் பிரியமுள்ள கிருஷ்ணனால் பூஜிக்கப்படுகிறாய். பக்தி ஆவேசம் உடைய பிரம்மாவால் பூஜிக்கப்
படுகிறாய். மனதைக் கவரும் வீணை முதலிய வாத்யங்களிசைக்கும் வித்யாதரர்களால் ஸ்தோத்திரம்
செய்யப்படுகிறாய்.
20.
ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே
ஸர்வ ஸௌபாக்ய வாஞ்ச்சா வதூ
பீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு
காதா ஸமுச்சாடனம்
கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம்
ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட
சோபாதி தூரீ பவத் கிம்சுகாபம் சுகம் லாலயந்தீ பரிக்ரீடஸே.

செவிகளுக்கு இனிய நாதமுடைய வீணையினால் கின்னர்களால் பாடப்படுகிறாய். யக்ஷ, கந்தர்வ, ஸித்தர்களின் ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். இஷ்ட ஸித்திகளில் விருப்பங்கொண்ட தேவஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். சகல வித்யைகளின் ஸாரமுடைய
இனிமையான ஸ்லோகங்களை மொழிகின்றதும், கழுத்தின் அடிப்பாகத்தில் மூன்று வர்ணக் கோடுகளையுடையதும், அழகிய பச்சை நிற இறக்கைகள் உடையதும், புரச மொட்டின் நேர்த்தியை எஞ்சுகிற அழகுடன் கூடிய மூக்குடையதும் ஆன கிளியுடன் விளையாடிக் களிக்கிறாய்.
21.
பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபிஸ்ப்பாடிகீம்
ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம்சாங்குசம்
பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே தஸ்ய
வக்த்வரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.
யேன வாயா வகாபாக்ருதிர்
பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா:
யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
கிம் ந ஸித்யேத்வபு:
ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம்த்யாயத:

தாமரை போன்று அழகிய இரு கைகளில் ஞானத்தின் சாரமாகிய புஸ்தகத்தையும், ஸ்படிகமணி ஜப மாலையையும் தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை த்யானிப்போர் நாவின் மூலம் உரைநடை, செய்யுள் வடிவான வாக்சாதுர்யம் தானே வெளிப்படுகிறது. சிவந்த
மேனியளாய் உன்னை த்யான செய்பவர்களுக்கு ஸ்த்ரீ புருஷர்கள் வசப்படுகிறார்கள். ஐஸ்வர்ய ரூபியாக உன்னை தியானிப்பவர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாய். சந்த்ர கலையை சிரசில் அணிந்த உனது அழகு பொழிந்த நீல வர்ண சரீரத்தை மனதில் வைத்து த்யானம்
செய்பவருக்கு எதுதான் கிட்டாது.
22.
தஸ்ய லீலாஸரோவாரித:
தஸ்ய கேளீவனம் நந்தனம்
தஸ்ய பத்ராஸனம் பூதலம்,
தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ,
தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்
மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே,
ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே,
ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே
ஸர்வயோகாத்மிகே,
ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே,
ஸர்வவிச்வாத்மிகே,
ஸர்வ தீக்ஷவத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே,
ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம்,
பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:

சமுத்திரம் (ஸம்சார) அவருக்கு விளையாட்டாக கடக்க முடிகிறது. தேவலோக
நந்தவனம் அவருக்கு விளையாட்டிடம் ஆகிறது. பூமி ஸிம்ஹானமாகிறது. சரஸ்வதியும் பணிப்பெண்ணாகிறாள். அவர்க்கு ஐஸ்வர்யலக்ஷ்மீ பணிந்து செயல்படுகிறாள். சகல தீர்த்தங்களின் வடிவானவளே, சகல மந்த்ர ஸ்வரூபிணியே, சகல சாஸ்த்ர ரூபிணியே, மந்த்ர ரூபமான உபாஸனா யந்த்ரங்களில் உறைபவளே!
எல்லா
ஜ்யோதிஷ்சக்கரங்கள், சக்திகளுக்கும் இருப்பிடமானவளே, எல்லா தேவதா ஸ்தானங்களின் வடிவானவளே, எல்லா தத்வார்த்தங்களுக்கும் உறைவிடமே, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமானவளே, யோகம் முதலிய சகல உபாஸனை சாதனைகளுக்கும் இருப்பிடமானவளே, சகல சப்த ரூபங்களுக்கும் உறைவிடமே, அக்ஷரங்களின் ஸ்வரூபிணியே, யக்ஞம்
முதலிய உபாசனா தீக்ஷைகளில் உறைபவளே, எங்கும் வியாபித்த அத்வைத வடிவினளே, ஹே உலகங்களின் தாயே! என்னை காப்பாற்று, என்னைக் காப்பாற்று, என்னைக் காப்பாற்று, உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள்.🙏🏻🙏🏻
முழு ஸ்லோகத்தையும் கேட்டு பயில
பகுதி 1

பகுதி 2
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.